மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

காவேரி கூக்குரல்: சத்குருவைத் தவிர எவராலும் முடியாது!

 காவேரி கூக்குரல்: சத்குருவைத் தவிர எவராலும் முடியாது!

தலைக்காவேரியில் இருந்து கடைக்காவேரி வரை சத்குரு அவர்களால் நடத்தப்பட்ட காவேரி கூக்குரல் பயணம், புதுச்சேரி, சென்னை கடந்து நேற்று (செப்டம்பர் 17) கோயமுத்தூரில் நிறைந்து நெகிழ்ந்தது.

கொடிசியா அரங்கில் கோவையே கூடி தங்கள் மண்ணின் சொந்தக்காரர் என்று சத்குருவை வாழ்த்தித் தீர்த்தது.

இந்நிகழ்வில் பேசிய கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேச்சில், “கர்நாடக அரசும், தமிழக அரசும், புதுச்சேரி அரசும் காவேரி விஷயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று சொன்னால், சத்குருவை தவிர வேறு எந்த மனிதராலும் இந்த ஒற்றுமையை ஏற்படுத்திவிட முடியாது” என்று அடித்துச் சொன்னார். அதுதானே உண்மை.

நிகழ்வில் பேசிய மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “ நீரின்றி அமையாது உலகு என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பெருமான் நமக்கு அளித்துள்ளார். காவேரிக் கரையில் 242 கோடி மரங்களை நடுவதற்கு சத்குரு அவர்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்தப் பயணத்தின் மூலம் வேளாண் காடு வளர்க்கும் திட்டம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தியிருக்கிறார் சத்குரு.

இந்த இயக்கத்தின் மூலம் காவேரி இந்தியாவிலேயே அதிக மரக் கன்றுகளை நடுபவர் மதிப்புக்குரிய சத்குரு அவர்கள்தான். இதனால் காவேரியின் தண்ணீர் தக்க வைக்கும் ஆற்றல் அதிகரிப்பதோடு விவசாயிகளுக்கும் பெரும் நன்மைகள் ஏற்படும்.

மூன்றரை கோடி கன்றுகளை நட்டுள்ள ஈஷா இயக்கத்தின் விரிவான களப் பணி அனுபவம், தனித்துவமான ஆற்றல், மக்களின் ஆதரவு ஆகியவை சத்குருவிடம் இருக்கிறது. ஈஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டது போல், காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் எல்லா மாநிலத்திலும் போய் ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறார் சத்குரு அவர்கள். சத்குரு அவர்கள் கோவைமாவட்டத்தில் இருப்பதே நமக்குப் பெருமை” என்றார்.

மோட்டார் சைக்கிள் பயணம் நிறைந்திருக்கலாம். சத்குருவின் மரம் நடும் பயணம் தொடர்கிறது.

(காவேரி கூக்குரல் ஒலிக்கும்)

விளம்பர பகுதி

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon