மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

அலட்சிய அதிகாரிகள், அரைவேக்காட்டு அரசியல்வாதிகள்: கமல் ஆவேசம்!

அலட்சிய அதிகாரிகள், அரைவேக்காட்டு அரசியல்வாதிகள்: கமல் ஆவேசம்!

சுபஸ்ரீ மரணம் குறித்து ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

பள்ளிக்கரணை முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் இல்லத் திருமணத்திற்காக வைத்த சட்டவிரோத பேனரால் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் உயிரிழந்தார். அவரது மரணத்துக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கமல்ஹாசன் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 20), “தமிழகத்தில் அலட்சியக் கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தி வைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்” என கூறி கமல் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “உலகத்தில் கொடுமையான விஷயம், வாழ வேண்டிய பிள்ளைகளின் மரண செய்தியை அவர்களின் பெற்றோர் கேட்பது தான். சுபஸ்ரீயின் மரணச் செய்தியும் அப்படிப்பட்டது தான். தனது பெண்ணின் ரத்தம் சாலையில் சிந்திக்கிடப்பதை பார்க்கையில் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் திகிலும் பீதியும் ஏற்படும். பெண்ணை, பெண்களை பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. இந்த மாதிரி பல ரகுக்களும், சுபஸ்ரீக்களும் அரசின் அலட்சியத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon