மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 20 நவ 2019

புதிய செமஸ்டர் தேர்வு விதி: மாணவர்கள் வழக்கு!

புதிய செமஸ்டர் தேர்வு விதி: மாணவர்கள் வழக்கு!

தேர்வு முறையில் அண்ணா பல்கலை கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அண்ணா பல்கலை மற்றும் உயர் கல்வித் துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து புதிய விதிமுறைகளை வகுத்தது. அதன்படி, மாணவர் ஒருவர் ஏதேனும் ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் அதில் தேர்ச்சி அடைய மூன்று வாய்ப்புகள் அளிக்கப்படும். இந்த மூன்று வாய்ப்புகளில் தேர்ச்சி அடையாவிட்டால், மேற்கொண்டு அடுத்த செமஸ்ட்டருக்கு செல்ல முடியாது. மீண்டும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே செல்ல முடியும்” என்று விதிமுறை வகுக்கப்பட்டது,

இதை எதிர்த்து ஜே.கே.கே நடராஜா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மெளலி மற்றும் பிரியதர்சினி உள்ளிட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், புதிய விதிமுறையால் தங்களது தேர்ச்சி பாதிக்கப்படுவதுடன், படிப்பு முடிந்து உடனடியாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும், எனவே இந்த புதிய விதிமுறைகளை 2 மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடைமுறைப் படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

இந்த மனு இன்று (செப்டம்பர் 20) நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தவடிவேல், புதிய நடைமுறையால் 2 மற்றும் 3ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த ஆண்டு மாணவர்களுக்குப் பழைய முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதைவிசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து அண்ணா பல்கலை மற்றும் உயர் கல்வித் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon