மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 நவ 2019

இணையத்தை கலக்கும் இளம் எம்பிக்கள்!

இணையத்தை கலக்கும் இளம் எம்பிக்கள்!

இந்தியாவின் இளம் பெண் எம்பிக்கள் இருவர் கண்களைக் கவரும் வண்ணம் நடனமாடியிருக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வட மாநிலங்களில் துர்கா பூஜை எனப்படும் இந்து சமய விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அக்டோபர் மாதம் கொண்டாடப்பட உள்ள இந்த பண்டிகைக்காக தற்போதிலிருந்தே மக்கள் பலவிதங்களிலும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் துர்கா பூஜையை முன்னிட்டு உருவாக்கப்பட்ட பாடல் ஒன்றிற்கு இரு பெண் எம்.பி.க்கள் அசத்தலாக நடனமாடியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘Ashey Maa Durga Shey’ என்ற அந்த பாடலுக்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் நுஸ்ரத் கான் மற்றும் மிமி சக்ரபர்த்தி ஆகியோர் வண்ணமிகு உடையில் நளினத்துடனும், அசுரனை வதம் செய்வதாக ஆக்ரோஷமுடனும் நடனமாடியுள்ளனர்.

டிஎம்டி கம்பி நிறுவனம் வெளியிட்ட இந்த வீடியோ 15 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இரு இளம் எம்.பிக்களும் நடிகைகளாக இருந்து அரசியல் பிரவேசம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon