மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

மாசெ ஆகும் மகன்: மகிழ்ச்சியில் பொன்முடி

மாசெ ஆகும் மகன்: மகிழ்ச்சியில் பொன்முடி

திமுக பொதுக்குழு வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி கூட இருக்கும் நிலையில், கட்சிக்குள் இப்போது மாசெக்களாக இருக்கும் சிலர் மாநில பதவிகளுக்கு உயர்த்தப்படுவதாக பேச்சுகள் உலவிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக இப்போது இருக்கும் பொன்முடியின் ஆதரவாளர்கள் சில விஷயங்களை உறுதியாகச் சொல்லிவருகிறார்கள்.

“விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் அமைச்சர் (பொன்முடியை இப்போதும் இப்படித்தான் சொல்கிறார்கள் இவர்கள்) சந்தித்து வருகிறார். அப்போது மிகவும் மகிழ்ச்சியாக சில செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘தளபதி என்னை மாநில அளவுக்கு வந்துடுங்கனு கூப்பிட்டார். நான் மாநில நிர்வாகத்துக்கு போறதால அடுத்து நம்ம கௌதம சிகாமணியை மாவட்டச் செயலாளர் ஆக்குறதுக்கும் தளபதி சம்மதம் சொல்லிட்டார். அதனால எனக்கு எப்படி ஒத்துழைப்பு கொடுத்தீங்களோ அதேபோல கௌதம சிகாமணிக்கும் நீங்க ஒத்துழைப்பு கொடுக்கணும்’ என அமைச்சர் நிர்வாகிகளிடம் பேசிவருகிறார்.

பொதுக்குழுவுக்குப் பின் கட்சியில் இப்போது சீனியர்களாக இருக்கும் பொன்முடி உள்ளிட்டவர்களுக்கு துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட மாநில அளவு ப்ரமோஷன் இருக்கும். அதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் அவர்கள் சொல்பவர்களையே மாசெவாக்கும் திட்டமும் இருக்கிறது. அந்த வகையில்தான் பொன்முடிக்கு ப்ரமோஷன் கொடுத்துவிட்டு, கௌதக சிகாமணியை மாசெ ஆக்கப் போகிறார்கள்” என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon