மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

காவேரி கூக்குரல்: சத்குருவோடு கர்நாடக அரசு ஆலோசனை!

 காவேரி கூக்குரல்: சத்குருவோடு கர்நாடக அரசு ஆலோசனை!

விளம்பரம்

தலைக்காவேரி முதல் கடை காவேரி வரை இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களோடும் இணைந்து காவேரி கூக்குரல் பயணத்தை நடத்தி முடித்திருக்கிறார் சத்குரு.

இந்தப் பயணம் இப்போது தனது அடுத்த கட்டத்தை ஆரம்பித்துவிட்டது. காவேரி கூக்குரல் பயணத்தை வாழ்த்திய கர்நாடக முதல்வர் எடியூரப்பா விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் பற்றிய விழிப்புணர்வை கர்நாடக அரசு தொடர்ந்து ஏற்படுத்தும் என்று அப்போதே உறுதி தந்தார்.

அதன்படி உடனடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது கர்நாடக அரசு. சத்குரு அவர்களை வரவழைத்து கர்நாடக தலைமைச் செயலாளர் டி.எம். விஜயபாஸ்கர், கர்நாடக முதல்வரின் ஆலோசகர் எம் லட்சுமிநாராயணன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சந்தீப் தேவ், கர்நாடகத்தின் தலைமை வனப்பாதுகாவலர் என்று முக்கியமான அதிகாரிகளையும் அழைத்து செப்டம்பர் 18ஆம் தேதி ஒரு முக்கியத்துவம் மிகுந்த சந்திப்பை நடத்தியிருக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

சத்குரு, கர்நாடக முதல்வர், வனத்துறை அதிகாரிகள் என நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் கர்நாடக விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் அமைப்பது பற்றிய ஆக்கபூர்வமான ஆயத்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. காவேரி கூக்குரல் பயணத்தை எதற்காக சத்குரு நடத்தினாரோ, அதன் தாத்பரியத்தை பூர்த்தி செய்வதற்காக கர்நாடக அரசு எடுத்து வைத்திருக்கும் ஆக்கபூர்வமான அடுத்தகட்ட முன்னெடுப்பு இது.

கர்நாடக அரசு அதிகாரிகளிடம் மண்ணுக்கேற்ற மரங்களை விவசாயிகளுக்கு எப்படி பரிந்துரை செய்வது போன்ற ஆலோசனைகளை வழங்கினார் சத்குரு. கர்நாடக அரசும் காவிரி குரலும் இணைந்து செயல்படுவதற்காக 5 அல்லது 6 பேர் கொண்ட செயல்திட்ட குழு ஒன்றையும் உருவாக்குவதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள்.

கர்நாடக அரசை போலவே தமிழக அரசும் காவேரி கூக்குரலைக் கையில் எடுத்துக் கொண்டு வேளாண் காடுகளை உருவாக்க முனைந்தால் காவேரி கூக்குரல் மேலும் மேலும் வெற்றி அடையும். இது நடக்கும்... காவேரி செழிக்கும்!

(காவேரி கூக்குரல் ஒலிக்கும்)

விளம்பர பகுதி

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon