மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

மண் சார்ந்த கிராமிய இசையில் அசுரன்!

 மண் சார்ந்த கிராமிய இசையில் அசுரன்!

விளம்பரம்

கலைப்புலி எஸ்.தாணு ‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள ‘அசுரன்’, மண்ணின் கதையையும் மக்களின் கதையையும் பேசும் படமாக உருவாகியிருக்கிறது.

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களின் வெற்றிக்குப் பின் இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான நான்காவது படமென்பதால், அசுரன் மீதான எதிர்பார்ப்பும் தலைப்பைப் போலவே உள்ளது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கருணாஸின் மகன் கென் நடித்திருக்கிறார். தனுஷ்-மஞ்சு வாரியருக்கு மகனாக நடிக்கும் இவர், படம் முழுக்க தனுசுடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுகப் படத்திலேயே வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் சவாலை எளிமையாக கையாண்டிருக்கிறார் கென்.

அசுரன் குறித்து கென்

“என் வாழ்க்கையில் நான் மிக மிக முக்கியமான நபராக கருதும் மனிதர் இயக்குநர் வெற்றி மாறன். அவருடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தயாரிப்பாளர் தாணு சார், படப்பிடிப்புத் தளத்திற்கு எப்போது வந்தாலும் உற்சாகப்படுத்துவார். அப்புறம் எனக்கு அப்பா, ஃபிரண்டு எல்லாமே ஒருவர் தான். அவர் தான் தனுஷ் சார். அவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் கொஞ்சம் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு நண்பன் போலத் தான் பழகுவார் தனுஷ். படப்பிடிப்பில் அவருடன் நடிக்கும் எனக்கு கஷ்டமே தெரியவில்லை. இந்தப் படத்தின் மூலமாக அவரிடம் நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.”

“படப்பிடிப்பு தளத்தில் நானும் அம்மாவாக நடித்த மஞ்சு வாரியரும் தான் தினமும் புலம்பிக் கொண்டே இருப்போம். இருவருக்குமே புதிய அனுபவமாக இருந்தது இந்தப் படப்பிடிப்பு. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்தில் என்னை பாட வைத்திருக்கிறார். அவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்கிறார் கென்.

தொடர்ந்து வெற்றி மாறன்-தனுஷ் கூட்டணியில் பயணிப்பவர் ஜி.வி. பிரகாஷ். ஜிவி தன்னுடைய திரைக்கதையின் கருவி என வெற்றி மாறன் ஒரு முறை கூறியிருப்பது ஜி.வி.யின் இசைக்கான அங்கீகாரம்.

அசுரன் குறித்து ஜி.வி. பிரகாஷ்

“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த தாணு சாருக்கு நன்றி. வெற்றி மாறன், தனுஷ் இரண்டு பேருக்கும் நன்றி. முக்கியமான கலைஞர்கள் நடித்துள்ள நல்ல படமிது. படத்தில் முழுக்க மண் சார்ந்த இசையையும் கிராமிய இசையையும் தான் பயன்படுத்தி இருக்கிறோம். அசுரன் உங்களை நிச்சயம் ஈர்க்கும்” எனக் கூறியுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் கத்தரி பூவழகி, பொல்லாத பூமி ஆகிய பாடல்கள் படத்தின் நிலத்திற்குள் இருந்து ஒலிக்கும் குரலாக ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கரிசல் வட்டாரப் பின்னணியில் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது அசுரன். காத்திரமான ஒரு நாவலை வெற்றி மாறன் போன்ற தீவிரமான கலைஞனின் கைவண்ணத்தில், தனுஷின் நடிப்பில் காண ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது.

அசுரனின் வேட்டை இன்னும் 15 நாட்களில்!

விளம்பர பகுதி

வெள்ளி, 20 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon