விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை: சிவன்

public

விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2ல் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நிலவில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் தரையிறங்கும் பகுதிக்கு 2.1கி.மீட்டர் தொலைவில் இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இஸ்ரோவுடன் நாசாவும் சேர்ந்து விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வந்தது. விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் 14 நாட்கள் ஆகும். அதன்படி அதனுடைய ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதுமட்டுமின்றி நிலவில் பகல் காலம் முடிந்து இன்று முதல் 14 புவி இரவுகள் தொடங்குகிறது.

இந்த புவி இரவில் கடுமையான குளிர் நிலவும். அப்போது மைனஸ் 200 டிகிரிக்கும் அதிகமான கடும் பனி நிலவும். இதனால் சந்திரயான் 2ல் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் பாதிப்படையும் என்று இஸ்ரோ ஏற்கனவே தெரிவித்தது. வெப்பம் இல்லாத காரணத்தால் இதில் உள்ள சோலார் திறன்கள் செயலிழந்து அதனால் வேலை செய்ய முடியாது என்றும் கூறியது.

இதற்கிடையே விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இருப்பினும் சந்திரயான் 2 திட்டம் தோல்வி அடையவில்லை என்று தெரிவித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், ஆர்பிட்டரை வைத்து நிலவை ஆராய்ச்சி செய்யும் பணியில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் ஏஎன்ஐ ஊடகத்துக்கு இன்று(செப்டம்பர் 21) பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன், ”விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்பு கொள்வதற்கான 14 நாட்கள் காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சந்திரயான் 2 ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளன, 8 கருவிகளும் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்” என கூறினார்.

[வீடியோ](https://www.editorji.com/video/4/main/share=1569037849195183)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *