மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

போராட்டத்திற்குப் பிறகு கலைஞர் சிலை திறப்பு: ஸ்டாலின்

போராட்டத்திற்குப் பிறகு கலைஞர் சிலை திறப்பு: ஸ்டாலின்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைக்கப்பட்ட கலைஞரின் சிலையை ஸ்டாலின் திறந்துவைத்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞரின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் பல இடங்களில் அவருக்கு திமுகவினர் சிலைகள் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கலைஞரின் சிலை திறப்பு நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞரின் சிலையைத் திறந்துவைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்டச் செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சிலையைத் திறந்துவைத்துப் பேசிய ஸ்டாலின், “பன்னீர்செல்வம் பூங்காவில் கலைஞருக்கு சிலை வைக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை நீதிமன்றத்தை நாடி போராடியபோது இந்த அரசு இப்போது அனுமதி கொடுத்தது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு கலைஞரின் அரசியல் குருகுலத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்ணா, எம்ஜிஆர், பெரியார் சிலைக்கு அருகில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கலைஞர். அவரது வாழ்க்கையே போராட்டம் தான், பள்ளியிலும் போராடியே சேர்ந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட பிறகுதான். கல்லக்குடி என பெயர் மாற்றத்துக்காக போராட்டம் நடத்தியவர் கலைஞர். இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்தார். இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர்தான் கலைஞர்” என்று குறிப்பிட்டார்.

தமிழகத்திற்காகவும், தமிழர்களுக்காகவும் கலைஞர் மேற்கொண்ட போராட்டங்களும், தியாகங்களும் என்றும் நினைவு கூறத்தக்கவை என்று கூறிய ஸ்டாலின், “இப்போது பெரும் போராட்டத்திற்கு பின் அதேபோல் அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைத்தது பெரிய மனநிறைவை தருகிறது” என்று உரையாற்றினார்.

ஞாயிறு, 22 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon