மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 செப் 2019

ஊழல் நாடகம்: மக்கள் நீதி மய்யம் புறக்கணிப்பு!

ஊழல் நாடகம்: மக்கள் நீதி மய்யம் புறக்கணிப்பு!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை விட்டுள்ளார்.

இன்று(செப்டம்பர் 22) நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பழைய கொள்ளையர் கட்சிகளையும் அதன் கூட்டுப் பங்காளிகளையும் பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி, 2021-ல் ஆட்சிப் பொறுப்பினை மக்கள் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.

நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்கவைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களும் ஆள்பவர்களும் போராடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது'' என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஹெச்.வசந்தகுமார். இவர், கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் நின்று வெற்றிபெற்றதையடுத்து, தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி, தொகுதிகள் காலியாக இருப்பதாக தமிழக சட்டப் பேரவை அறிவித்தது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று(செப்டம்பர் 21) தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத்தில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதனிடையில், மக்கள் நீதி மய்யம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது என அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

ஞாயிறு 22 செப் 2019