மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்!

 உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்!

காவேரி மருத்துவமனை

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு. அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7 சதவிகிதம் இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள். அதுபோல் ஒவ்வொரு நொடியிலும் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 6,00,000 லட்சம் மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தறியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியாக ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20 சதவிகிதம் மூளைக்குச் செல்கிறது.

நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 1,00,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்: கண்கள் 31 நிமிடங்கள், மூளை 10 நிமிடங்கள், கால்கள் 4 மணி நேரம், தசைகள் 5 நாட்கள், இதயம் சில நிமிடங்கள்.

காவேரி மருத்துவமனை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம்

உள்நாட்டு மற்றும் சர்வதேச நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. மருத்துவ வல்லுநர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்கள் அடங்கிய மிகவும் திறமையான பலதரப்பட்ட குழு மூலம் பன்முக சிறப்பு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.

தொடர்பு கொள்ள: +91-431-4022555 / 4077777

விளம்பர பகுதி

சனி, 21 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon