மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

நாகேஷ் சொல்லிக் கொடுத்த பாடம்!

 நாகேஷ் சொல்லிக் கொடுத்த பாடம்!

விளம்பரம்

கலைப்புலி எஸ்.தாணு ‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள ‘அசுரன்’, மண்ணின் கதையையும் மக்களின் கதையையும் பேசும் படமாக உருவாகியிருக்கிறது.

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களின் வெற்றிக்குப் பின் இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான நான்காவது படமென்பதால், அசுரன் மீதான எதிர்பார்ப்பும் தலைப்பைப் போலவே உள்ளது.

நடிகர் தனுஷ், மகேஷ் ஆக துள்ளுவதோ இளமையில் தொடங்கிய பயணம், 17 வருடங்களையும் கடந்து இன்று சிவசாமியாக அசுரன் படத்தில் வெற்றிகரமாக தொடர்ந்து வருகின்றது. தனுஷ் இன்று இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவராக வலம் வருகின்றவர். ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற தனுஷ், 7 பிலிம் ஃபேர் விருதுகளையும் அள்ளியிருக்கிறார். தமிழ், இந்தி, ஹாலிவுட் என மொழிகளை கடந்து நடிப்பின் மொழியால் திரையில் மிளிர்பவர் இவர்.

தனுஷின் அசுரன் அனுபவங்கள்

"காதல் கொண்டேன் சமயத்தில் நாகேஷ் சாரிடம் நிறைய பேசுவேன். எப்படி நடிக்கிறாங்க பாருங்க சார், நானும் அப்படி நடிக்க வேண்டும் என்று மிக ஆர்வமாகச் சொல்லுவேன். எனக்கு 18 வயதிருக்கும் சமயம் அது. அப்போது அவர் , 'டேய் யார் உன் கண் முன்னால் பயங்கரமாக நடிக்கிறார்கள் என்று தெரிகிறதோ அதுதான் சுமாரான நடிப்பு. நடிப்பதே தெரியாமல் நடிப்பதுதான் பெரிய நடிப்பு' என்றார்.

அப்படிப் பார்த்து பயப்பட வேண்டிய ஒரு நடிகை மஞ்சு வாரியர். அவர் நடிப்பதே தெரியாது. எப்படி ஒரு கதாபாத்திரமாக நடித்துவிட்டு சட்டென இயல்பாக மாறிவிடுகிறார் என்பதே எனக்குத் தெரியவில்லை. சில முக்கியமான காட்சிகளில் நடித்துவிட்டு என்னால் அந்த கதாபாத்திரத்திலிருந்து சட்டென வெளியே வர முடியாது. அந்த ‘ஹேங்க்-ஓவரில்’ அப்படியே இருப்பேன். ஆனால் அவர் நடித்து முடித்த அடுத்த நொடியே ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பார். எப்படி அவரால் முடிகிறது என்பதே தெரியாது” என்றார்.

இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கரிசல் வட்டாரப் பின்னணியில் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது அசுரன். காத்திரமான ஒரு நாவலை வெற்றி மாறன் போன்ற தீவிரமான கலைஞனின் கைவண்ணத்தில், தனுஷின் நடிப்பில் காண ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது.

அசுரனின் வேட்டை இன்னும் 13 நாட்களில்!

விளம்பர பகுதி

சனி, 21 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon