மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

வேளாண் காடுகள்: சத்குரு விளக்கம்!

 வேளாண் காடுகள்: சத்குரு விளக்கம்!

விளம்பரம்

காவேரி கூக்குரல் மூலம் காவேரி வளையத்தில் 242 கோடி மரங்களை நடுவதற்காக பெரும் பயணத்தை நடத்தி முடித்துள்ள சத்குரு, தனது வலைப்பூ பக்கத்தில் வேளாண் காடுகள் பற்றிய விளக்கத்தை அளித்திருக்கிறார். இது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்!

சத்குரு சொல்கிறார்...

“நமது அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் தொழிலோ, பணமோ அல்லது தங்கமோ அல்ல. அவர்களுக்கு நாம் மிக முக்கியமாக ‌வழங்க வேண்டியது, வளம் நிறைந்த மண் மற்றும் வற்றாமல் பாயக்கூடிய நதிகள்.

இந்த இரண்டு அம்சங்களுக்கும், மரங்கள் மிகவும் முக்கியமானது. மண் வளமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு இரண்டு ஆதாரங்கள் மட்டுமே இருக்கிறது: மரங்களிலிருந்து உதிரும் இலைகள் மற்றும் கால்நடைகளின் கழிவுகள். மரங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டுவிட்டன, கால்நடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி பயணம் செய்கின்றன.

எனவே, நாம் எந்தப் பொருளைக் கொண்டு மண்ணை வளப்படுத்தப் போகிறோம்? மரங்கள் மற்றும் கால்நடைகள் இல்லாமல், உண்மையில் இதற்கு தீர்வு இல்லை

கால்நடைகளையும் மரங்களையும் மீண்டும் நிலத்தில் கொண்டு வருவதுதான் இப்போது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயல். இதை கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட அளவில் நாம் ஏற்கனவே செயல்படுத்தி வந்திருக்கிறோம். 69,760 விவசாயிகளுக்கு வழக்கமான பயிர்சாகுபடியிலிருந்து வேளாண் காடு வளர்ப்பிற்கு மாறுவதற்கு நாம் உதவியாக இருந்துள்ளோம்.

வேளாண் காடுகள் என்பது வழக்கமான பயிர்களுடன் மரங்களை நடும் முறையாகும். இது மண் மற்றும் நீர் நிலைமையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விவசாயியின் பொருளாதார சூழ்நிலையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கிறது. அவர்களின் வருமானம் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் மூன்று முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்.

சுமார் 83,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காவேரி படுகை முழுவதும் வேளாண் காடுகளை கொண்டு வர நாம் விரும்புகிறோம். நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி மர நிழலின் கீழ் இருக்குமானால், காவேரி நிச்சயம் பாயும். ஏனெனில், நடப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் அது மண்ணில், ஆண்டுக்கு சுமார் 3,800 லிட்டர் தண்ணீரைத் தக்க வைத்துக்கொள்ளும் திறன் உள்ளது என்று தரவுகள் கூறுகின்றன” என்கிறார் சத்குரு.

வேளாண் காடுகள் என்றால் எந்த மாதிரியான மரங்களை நடவு செய்ய வேண்டும்? அதிலிருந்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்குமா? எப்போது கிடைக்கும்?

இப்படி வரிசை கட்டி நிற்கும் கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் நிச்சயம் இருக்கின்றன.

(காவேரி கூக்குரல் ஒலிக்கும்)

விளம்பர பகுதி

சனி, 21 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon