மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 செப் 2019

எம்மி விருதுகள்: கேம் ஆஃப் திரோன்ஸ், செர்னோபில் வெற்றி!

எம்மி விருதுகள்: கேம் ஆஃப் திரோன்ஸ், செர்னோபில் வெற்றி!

எச்.பி.ஓவின் பிரபல கேம் ஆஃப் திரோன்ஸ், செர்னோபில் ஆகிய தொடர்கள் 71 ஆவது எம்மி விருதுகள் விழாவில் வெற்றி பெற்றன.

நேற்று இரவு (செப்டம்பர் 22) லாஸ் ஏஞ்சல்ஸில் 71 ஆவது எம்மி விருதுகள் விழா நடைபெற்றது. எம்மி விருதுகளை தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமி வழங்கி வருகின்றது. எம்மி விருது தொலைக்காட்சி தொடருக்கான ஆஸ்கராக கருதப்படுகிறது. எச்.பி.ஓவின் பிரபல கேம் ஆஃப் திரோன்ஸ், செர்னோபில் ஆகிய தொடர்கள் முக்கிய விருதுகளை கைப்பற்றியுள்ளது. இவ்விரு தொடர்களும் இந்தியர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களாகும்.

இவ்விருது விழாவில், ‘கேம் ஆஃப் திரோன்ஸ்’ சிறந்த நாடகத் தொடருக்கான விருதை வென்றது. டைரியன் லானிஸ்டராக நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான இந்தாண்டின் எம்மி விருதை நடிகர் பீட்டர் டிங்க்லேஜ் வென்றார். கேம் ஆஃப் திரோன்ஸில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும், அனைவரது மனதையும் கவர்ந்த நடிகராக முதல் சீசனிலிருந்து(மொத்தம் 8) வலம் வருபவர் இவர். எந்த சூழ்நிலையிலும் தன்னை விட்டுக் கொடுக்காத, நன்மை தீமை எனும் வரையறைக்குள் அடைபட்டுகொள்ளாத கதாபாத்திரம் டைரியன். சாதுர்யமும், சமயோசித சிந்தனையும் கொண்ட டைரியன் தன் கடந்த கால வலிகளை வைத்து அரசியல் முடிவுகளை எடுப்பதை எதிர்க்கும் கதாபாத்திரம் ஆகும்.

கேம் ஆஃப் திரோன்ஸ் 32 பரிந்துரைகளுடன் இந்த விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஃப்ளீபேக்(Fleabag) எனும் நகைச்சுவைத் தொடர், சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எழுத்து மற்றும் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதையும்(நகைச்சுவைப் பிரிவில்) வென்றது. ஃபோப் வாலர் பிரிட்ஜ் என்பவர் தான் இந்த தொடரை எழுதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். இந்த தொடர் சிறந்த நகைச்சுவைத் தொடர் பிரிவிலும் வென்றது.

செர்னோபில் அணு உலை பாதிப்பு பற்றிய முக்கியமான ஆவணமாகக் கருதப்படும் செர்னோபில் எனும் டாக்குமெண்ட்ரி-டிராமா மூன்று விருதுகளைப் பெற்றது. இத்தொடரை எழுதிய கிரேக் மஸின் மிகச்சிறந்த எழுத்துக்கான பிரிவில் விருதை வென்றார். மேலும், செர்னோபில் சிறந்த லிமிடெட் தொடருக்கான எம்மியையும், அதே பிரிவில் சிறந்த இயக்கத்துக்கான (இயக்குநர் ஜோஹன் ரென்க்) விருதும் பெற்றது.

வென் தே சீ அஸ்(When they see us) எனும் நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்த ஜேரல் ஜெரோமி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அமெரிக்கா செண்ட்ரல் பார்க்கில் ஒரு பெண்ணுக்கு நடந்த மிருகத்தனமான தாக்குதல் மற்றும் வன்புணர்வு சம்பவத்தில், குற்றம் நடந்த பகுதியில் வசித்த ஐந்து பதின்வயது கருப்பு-அமெரிக்கர்கள் தண்டனைக்குள்ளாகிறார்கள். பொதுப்பார்வையினால் எப்படி தவறு செய்யாதவர்கள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை கூறும் இத்தொடர், ஒரு உண்மைக் கதையாகும். அமெரிக்காவின் நிறவெறியை தோலுரித்துக் காட்டிய இச்சம்பவம், அதன் பின்னர் அந்நாட்டுச் சட்டங்களில் மாற்றம் ஏற்படும் அளவிற்கு தாக்கத்தை உண்டாக்கியது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 23 செப் 2019