மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 5 டிச 2020

திமுக வேட்பாளர் புகழேந்தி: பொன்முடி

திமுக வேட்பாளர் புகழேந்தி: பொன்முடி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுக சார்பில் இன்று (செப்டம்பர் 23) விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளர் புகழேந்தி விருப்ப மனுவை அறிவாலயத்தில் கொடுத்திருக்கிறார்.

விக்கிரவாண்டி தொகுதியில் யாருக்கு வாய்ப்பு என்று தொகுதியின் ஒன்றிய செயலாளர்களை கூட்டி தலைமை ஆய்வு நடத்தியபோது மாவட்டப் பொருளாளர் புகழேந்தியும், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயச்சந்திரனும் ரேஸில் இருப்பதை மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில், செப்டம்பர் 22 ஆம் தேதியே முன்னாள் அமைச்சரும் மத்திய மாவட்டச் செயலாளருமான பொன்முடி ரேஸில் இருக்கும் புகழேந்தியையும், ஜெயச்சந்திரனையும் அழைத்துப் பேசியிருக்கிறார்.

அப்போது இருவரிடமும் விவாதித்து, ‘புகழேந்தி தேர்தலில் போட்டியிடட்டும். உனக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும்’ என்று ஜெயச்சந்திரனிடம் கூறிய பொன்முடி, ‘நாளை அறிவாலயம் போய் விருப்ப மனு கொடுத்துவிடு. மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் கூட வருவார்கள்’ என்று தெரிவித்தார்.

அதன்படியே இன்று (செப்டம்பர் 23) காலை அறிவாலயம் வந்த விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளர் புகழேந்தி நிர்வாகிகளுடன் வந்து விருப்பமனுவை கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் விக்கிரவாண்டியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சுந்தீப் ஆனந்துக்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு பேச்சு எழ, அது பொன்முடிக்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதையடுத்தே உடனடியாக நேற்று புகழேந்தியையும், ஜெயச்சந்திரனையும் அழைத்துப் பேசியதாகச் சொல்கிறார்கள் விழுப்புரம் திமுகவினர்.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon