மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

நாங்குநேரியை நழுவ விடமாட்டோம்: அதிமுக நேர்காணல் நிலவரம்!

நாங்குநேரியை  நழுவ  விடமாட்டோம்: அதிமுக நேர்காணல் நிலவரம்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக விருப்ப மனு வாங்கும்போதே அதிமுக நேர்காணல் நடத்த ஆரம்பித்துவிட்டது.

இன்று (செப்டம்பர் 23) மாலை 3 மணியோடு விருப்ப மனு கொடுக்கலாம் என்றும் அதன் பிறகு 3.30 முதல் நேர்காணல் ஆரம்பிக்கும் என்றும் அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. நூற்றுக்கணக்கானோர் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன என்று வெளியே சொன்னாலும், இரு தொகுதிகளுக்கும் சேர்த்தும் ஐம்பது பேர் வரையே விருப்ப மனு செய்திருக்கிறார்கள் என்று அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.

அதன்படி இன்று மாலை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், , இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் மது சூதனன் ஆகியோர் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழு நேர்காணலை நடத்தியது. அப்போது விழுப்புரம், நெல்லை ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர் .

நேர்காணலில் பங்கேற்ற சிலரிடம் பேசியபோது, “நாங்குநேரியை பாஜக கேட்கிறது என்று தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இன்று நாங்குநேரி தொகுதிக்கும் சேர்த்துதான் நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி நாங்குநேரியிலும் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்” என்றார்கள்.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon