மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

ஒருவரை ஒருவர் ஆச்சர்யப்படுத்தும் திறமைசாலிகள்!

 ஒருவரை ஒருவர் ஆச்சர்யப்படுத்தும் திறமைசாலிகள்!

மக்கள் எதிர்பார்க்கும் படங்களை கொடுப்பவரான தயாரிப்பாளர் எஸ். தாணு, ‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘அசுரன்’.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறனும் நடிகர் தனுஷும் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் 'அசுரன்'. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிகர் தனுஷ், மகேஷ் ஆக துள்ளுவதோ இளமையில் தொடங்கிய பயணம், 17 வருடங்களையும் கடந்து இன்று சிவசாமியாக அசுரன் படத்தில் வெற்றிகரமாக தொடர்ந்து வருகின்றது. தனுஷ் இன்று இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவராக வலம் வருகின்றவர். ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற தனுஷ், 7 பிலிம் ஃபேர் விருதுகளையும் அள்ளியிருக்கிறார். தமிழ், இந்தி, ஹாலிவுட் என மொழிகளை கடந்து நடிப்பின் மொழியால் திரையில் மிளிர்பவர் இவர்.

சமீபத்தில் சென்னையில் நடந்த அசுரன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், அசுரன் படம் குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்தார்:

“சிவசாமி கதாபாத்திரம் இந்த வயதில் கிடைத்தது ரொம்ப பெரிய விசயம். வெற்றி மாறன் பொல்லாதவன் படத்தில் இருந்து சேலஞ்சிங்கான இன்ட்ரஸ்ட்டிங்கான கதாபாத்திரங்களை கொடுக்கிறார். அவரும் அவரது குழுவும் அசாதாரணமான உழைப்பை கொடுத்ததனால் தான், எங்களுக்கான பிளாட்ஃபார்ம் சரியாக அமைந்தது.

இந்த படத்தில் அத்தனை திறமைசாலிகள் நடித்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஆச்சர்யப்படுத்தும் திறமைசாலிகள். அப்படி ஒரு திறமைசாலி தான் கென். சின்ன பையனாக இருக்கிறான், முதல் படத்தில் நடிக்கிறான், படபடப்பு இருக்கும் என்று முதல் நாள் ஷூட்டிங்கில் ஆலோசனைகள் எல்லாம் கூறினேன். ஆனால், எங்கள் எல்லோரையும் விட அதிக நம்பிக்கையோடிருப்பது கென் தான். அவ்வளவு ஜாலியாக நடித்துவிட்டு சென்று விட்டான். நல்ல திரைக்கதைகளை கென் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பிரகாசமான எதிர்காலம் அவருக்கு உண்டு” என தனுஷ் கூறியுள்ளார்.

இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கரிசல் வட்டாரப் பின்னணியில் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது அசுரன். காத்திரமான ஒரு நாவலை வெற்றி மாறன் போன்ற தீவிரமான கலைஞனின் கைவண்ணத்தில், தனுஷின் நடிப்பில் காண ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது.

அசுரனின் வேட்டை இன்னும் 12 நாட்களில்!

விளம்பர பகுதி

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon