fமாத்திரை வடிவில் விஸ்கி: ருசிகர தகவல்!

public

பொதுவாக விஸ்கியை அருந்தும் போது, ஒரு கண்ணாடி குவளையில் விஸ்கியை ஊற்றி, வெண்ணிற ஐஸ் கட்டிகளையோ அல்லது குளிர்ந்த நீரையோ அதனுடன் கலந்து விரும்பிய வகையில் மெதுவாகவோ அல்லது வேகமாகவோ அதனை பருகுவர்.

இதற்கு மாற்றாக சமீபத்தில், *கிளென்லிவெட்* எனும் பிரபல விஸ்கி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பொன்று உலகெங்கிலும் உள்ள விஸ்கி பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஸ்கி பிரியர்களுக்கு பிடித்த, மிகவும் மதிப்புமிக்க விஸ்கி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான க்ளென்லிவெட், ஜெல்லி போன்ற காப்ஸ்யூல் வடிவில் விஸ்கியை அனுபவிக்கும் வழிகளை அறிமுகப்படுத்தி நூற்றாண்டுகளாக விஸ்கி பருகும் முறையை மறுவரையறை செய்துள்ளது.

சென்ற வாரம் லண்டனில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான காக்டெயில் விழாவில், இந்த விஸ்கி காப்ஸ்யூல்களை அறிமுகப்படுத்தியது க்ளென்லிவெட். அதாவது, கோப்பையில் தண்ணீரோ ஐஸ்கட்டிகளோ ஊற்றாமல், ஒரு மிட்டாயை சுவைப்பது போல, இனி விஸ்கியை சுவைக்கலாம். இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இயற்கையின் மிகவும் புதுப்பிக்கத்தக்க வளங்களில் ஒன்றான கடற்பாசிச்சாறு உறையில் ருசியான விஸ்கி காக்டெய்ல் காப்ஸ்யூல்கள் வருகின்றன’ என தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு காப்ஸ்யூலிலும் 23 மில்லி திரவம் இருக்கும். தற்போது லண்டனில் உள்ள பார் ஒன்றில் மட்டும் குறுகிய காலத்திற்கு விற்பனைக்கு வந்திருக்கும் இந்த விஸ்கி காப்ஸ்யூல்கள், விரைவில் உலகெங்கிலும் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து, க்ளென்லெவிட் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ:

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *