மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 அக் 2019

இந்திய எல்லையில் பாகிஸ்தானின் உளவு விமானம்!

இந்திய எல்லையில் பாகிஸ்தானின் உளவு விமானம்!

பஞ்சாப் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததையடுத்து, எல்லைப் பகுதியிலுள்ள ராணுவ, காவல் படையினர் உஷார் நிலையிலிருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாப் மாநில ஹூசைனிவாலா பகுதியில், திங்கட்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஓர் ஆளில்லா உளவு விமானம் நுழைந்ததை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் பார்த்ததையடுத்து, உயரதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

இரு நாட்டு எல்லைப் பகுதியில் பறந்த இந்த விமானத்தால் எல்லை பாதுகாப்புப் படையினருக்கும், பஞ்சாப் மாநில காவல் துறைக்கும் கூடுதல் உஷார் நிலையிலிருக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் ஐந்து முறை வானில் பறந்த இந்த விமானம் குறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் நேற்று (அக்டோபர் 8) முதல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐந்து முறை வந்த இந்த உளவு விமானம் இந்திய எல்லைக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தாண்டிவந்துவிட்டு, பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் சப்தமே இல்லாமல் வேகமாகத் திரும்பிச் சென்றுள்ளதாக எல்லை படையினர் தெரிவித்துள்ளனர். இந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லையிலிருந்து திங்கள் இரவு 10 மணி முதல் 10.40 மணி வரை பறந்துகொண்டிருந்தது. பின்னர் நள்ளிரவு 12.25 மணியளவில் இந்திய எல்லையைக் கடந்திருக்கிறது.

இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், ‘பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் ஹூசைனிவாலா பகுதியில் ஆளில்லா ட்ரோன் விமானத்தை வீரர்கள் பார்த்துள்ளனர். இந்த விமானம் பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்ததாகும். இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையும், பஞ்சாப் காவல் துறையும் அலெர்ட் செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தானிலிருந்து வந்த ஆளில்லா உளவு விமானம் பஞ்சாப் பகுதியில் ஏகே 47 ரக துப்பாக்கிகள், 8 சாட்டிலைட் போன்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை இந்திய எல்லைப் பகுதியில் விழச் செய்தது. இதனையடுத்து, மீண்டும் தற்போது பாகிஸ்தான் இந்த அத்துமீறலைச் செய்திருக்கிறது.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

புதன் 9 அக் 2019