மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

கிச்சன் கீர்த்தனா: காய்கறி அடை!

கிச்சன் கீர்த்தனா: காய்கறி அடை!

வேலை வேலை என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் ஆட்கள் பெருகிக்கொண்டே போகும் இந்தக் காலகட்டத்தில், பலராலும் சமையலுக்கு அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை. இப்படிப்பட்டவர்கள் குறைந்த நேரத்தில், சில பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, சுவையாக இருக்கும் உணவுகளைச் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குவதைக் குறைக்க இந்தக் காய்கறி அடை உதவும். இது அவசரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும் என்பது கூடுதல் சிறப்பு.

என்ன தேவை?

ரவை பதத்துக்கு அரைத்த மாவு - ஒரு கப்

துருவிய கேரட், வெங்காயம், பொடியாக நறுக்கிய கீரை (சேர்த்து) - அரை கப்

தோல் சீவி நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மாவுடன் காய்கறிக் கலவை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை அடைகளாக ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: தட்டு வடை

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon