காஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் பேசித் தீர்க்கவேண்டும்: சீனா

public

காஷ்மீர் தொடர்பாக ஐ.நா மாநாட்டில் ஏற்பட்ட மனக்கசப்புகளையும் கடந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இவ்விவகாரத்தை தீர்க்க வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் முறைசாரா உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச உள்ளார் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கும் ஜீ ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் முறைசாரா உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 2018ஆம் ஆண்டு சீனாவிலுள்ள உஹான் பகுதியில் நடந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு சென்னை மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா யுன்யிங் இன்று(அக்டோபர் 9) பெய்ஜிங்கில் நிருபர்களிடம் கூறுகையில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவின் மாமல்லபுரத்துக்கு வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார். மாமல்லபுரத்தில் நடக்கும் சந்திப்பில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து அதிபர் ஜீ ஜின்பிங் பேச உள்ளார். அதன்பின் 13ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு அதிபர் ஜீ ஜின்பிங் நேபாளம் செல்கிறார்” எனத் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் இரண்டு நாள் பயணத்தின் போது மகாபலிபுரம் நினைவுச்சின்னங்களான கடற்கரை கோயில், அர்ஜுனன் தபசு புடைப்புச் சிற்பம் மற்றும் ஐந்து ரதங்களை பார்வையிடவுள்ளார்கள். இந்தச் சந்திப்பில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன், பிரதமர் மோடி சர்வதேச விவகாரங்கள், பிராந்திய பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ ஜின்பிங்கின் இந்திய பயணத்திற்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெய்ஜிங்கில் அவரை சந்திப்பதைக் குறித்தும்; சீனத் தலைவர்களுடனான இம்ரான் கானின் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்சினை பேசப்படுமா என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா யுன்யிங்கிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய போது, “ஐ.நா மாநாட்டில் ஏற்பட்ட மனக்கசப்புகளையும் கடந்து காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானுமே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு” என்று கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு சீனா ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வந்தது. மேலும், உலக நாடுகளுக்கு சீனா அழுத்தமும் கொடுத்துவந்தது. இந்நிலையில், தற்போது இரு நாடுகளுமே இதனை பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என சீனா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *