மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

போலீஸ் ஸ்டேஷன் சரவணா ஸ்டோர்ஸுக்கா? மக்களுக்கா?

போலீஸ் ஸ்டேஷன் சரவணா ஸ்டோர்ஸுக்கா? மக்களுக்கா?

சென்னை பாடியில் அமைந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸில் உமர் பரூக் என்ற இளைஞர் பிஸ்கட் விலை அநியாயமாக விற்கப்படுவது பற்றி கேட்டதற்கு, பவுன்சர்களால் இழுத்துச் செல்லப்பட்டு, பின் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது பற்றி, மின்னம்பலத்தில் அநியாய விலை: தட்டிக்கேட்டவரைத் தாக்க முயன்ற சரவணா ஸ்டோர்ஸ்என்ற தலைப்பில் வீடியோ ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தச் செய்திக்கு வந்த பின்னூட்டங்களில் பலர் தங்களுக்கும் இதேபோன்ற நிலைமை சரவணா ஸ்டோர்ஸில் ஏற்பட்டதாக பகிரங்கமாக புகார் தெரிவித்திருந்தார்கள்.

இதற்கிடையில் நேற்று (அக்டோபர் 9) பகலில் கொரட்டூர் காவல்நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்த உமர் பாரூக்கும் அவரது நண்பரும் மமக இளைஞரணிச் செயலாளருமான புழல் ஷேக் முகமது அலியும் சென்றனர். அப்போது சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் மேனேஜரும், உமர் பரூக்கை தாக்கிய பவுன்சரும் காவல் நிலையத்துக்கு வந்திருக்கின்றனர்.

காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பது பற்றி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியிடம் பிரத்யேகமாக விளக்குகிறார் மமக இளைஞரணிச் செயலாளர் புழல் ஷேக் முகமது அலி.

சரவணா ஸ்டோர்ஸ், காவல்துறை மூலமாக புகார் கொடுத்தவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து பேச முயற்சிக்கிறது என்றும் அதை ஏற்றுக் கொள்ளாததால்தான் வேறு வழியின்றி புகாரைப் பதிவு செய்திருப்பதாகவும் கூறுகிறார் ஷேக் முகமது அலி.

வியாழன், 10 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon