மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 அக் 2019

எல்லையில் தாக்குதல்: இந்திய வீரர் பலி!

எல்லையில் தாக்குதல்: இந்திய வீரர் பலி!

இந்திய எல்லை கட்டுப்பாட்டுப் படையுடன் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்துக்குட்பட்ட பாலக்கோட் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் நேற்று (அக்டோபர் 22) பிற்பகல் சுமார் 1.20 மணியில் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாகிஸ்தான் படைகள் நடத்திய கடும் ‘ஷெல்’ தாக்குதலில் கிட்டத்தட்ட ஆறு பள்ளிகளின் மாணவர்கள் சிக்கித் தவித்தனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஆறு முதல் பத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் செயல்பட்டுவந்த மூன்று தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அக்டோபர் 20 அன்று தெரிவித்தார்

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 22) காலை 11.30 மணியளவில் மெந்தார் மற்றும் பாலகோட் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் சிறிய ஆயுதத் தாக்குதல்களைத் தொடங்கியதாகவும், பிற்பகல் 1.20 மணியளவில் அவர்கள் தீவிரமான துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர் என்றும் எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

அதே நேரம், நேற்று மாலை அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. காஷ்மீர் மண்டல போலீஸ், பயங்கரவாதிகள் அங்குள்ள வீடொன்றில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையொட்டி, காவல் துறையினர் அந்தப் பகுதியை முற்றுகையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் பதுங்கியிருந்த இடங்களில் ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

புதன் 23 அக் 2019