மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் பால்ஸ்

கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் பால்ஸ்

‘ஆபீஸ்லேர்ந்து வரும்போது, எனக்கு சிப்ஸ், கேக் வாங்கிட்டு வரணும்!’, ‘எனக்குப் பப்ஸ் வேணும்’ - இப்படி, தினமும் நொறுக்குத் தீனி கேட்டு நச்சரிக்காத பிள்ளைகளே இல்லை. இதில் பெரியவர்களும் விதிவிலக்கு அல்ல. பயணங்களின்போது, அலுவலகம் முடிந்து வந்து டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் சில நேரங்கள் எனச் சிலர் மிக்சர், சிப்ஸ், பீட்சா என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். இப்படி அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும் ‘ஸ்நாக்ஸ்’ என்று சொல்லப்படும் நொறுக்குத் தீனியால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றிய விவாதங்கள் ஒருபுறமிருக்க, வீட்டிலேயே செய்யப்படும் இந்த நட்ஸ் பால்ஸ் நிச்சயம் நன்மை தரும்.

என்ன தேவை?

வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்

வறுத்த எள் - 2 டீஸ்பூன்

பொட்டுக்கடலை - அரை கப்

ரஸ்க் - 6

பொடித்த வெல்லம் - 150 கிராம்

பேரீச்சை - 6

முந்திரி - 8

உலர்திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, நெய் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

பேரீச்சையைப் பொடியாக நறுக்கவும். முந்திரியைப் பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும். வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள், பொட்டுக்கடலை, ரஸ்க் ஆகியவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். இந்தக் கலவையுடன் பேரீச்சை, முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கலந்து, உருண்டைகளாகப் பிடித்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: வேர்க்கடலை சிக்கி

வியாழன், 7 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon