இலங்கை: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சஜித்துக்கு!

public

இலங்கையில் வரும் 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் தமிழர்களின் அதிகாரபூர்வ ஜனநாயக பிரதிநிதிகளாக விளங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது முடிவை இன்று (நவம்பர் 7) அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அதில் இடம்பெற்றிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பிளாட்டின் தலைவர் தர்மாதிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதேசாவை ஆதரிக்கிறோம்” uகாலகட்டத்தில் தமிழர்களை ஒட்டுமொத்தமாக போர் என்ற பெயரில் கொன்று குவித்த அன்றைய இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவருமான கோத்தபய ராஜபக்‌ஷே முக்கிய வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்‌ஷே ஆகியோருடன் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களில் முதல் இருவருக்கிடையிலேயே போட்டி பிரதானமாக நிலவுவதாகத் தோன்றுகிறது.

புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கில் அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானவராகவும் இருக்க வேண்டும். அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும் நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்டவராகவும், அனைத்துக் குடிமக்களது விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்” என்று தன் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், “ மேற்கூறிய இப்பெரும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது சிறந்தது என்பது பற்றி நன்கு சிந்தித்து சரியான ஒரு கணிப்பினை மேற்கொள்வது வாக்காளரின் கடமையாகும். இக்கணிப்பில் விடும் ஒரு தவறு ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும்.

இவ்விரு வேட்பாளர்ளுடைய முந்தைய செயற்பாடுகள், அவர்களது தேர்தல் அறிக்கைகள் ஆகியவற்றைப் பார்க்கையில் சஜித் பிரேமதாசவின் வேட்பிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பொருளாதார விடயங்கள் தொடர்பாக, இரு வேட்பாளர்களும் மிகவும் விரிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும். ஊழல் என்பது இரு வேட்பாளர்களது அரசாங்கங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகும். இலங்கை இருப்புக்கொள்ள வேண்டுமாயின், ஊழல் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

இவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்திற்கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களை அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *