டிக் டாக் லைக்குகள்: ஆபத்தை அறியாமல் விளையாடும் இளைஞர்கள்!

public

டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது. இது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி இளைஞர்கள் டிக் டாக் செயலியை முழு நேரமும் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர். ஒருவரின் திறமையை வெளிப்படுத்த முக்கிய இடமாக டிக் டாக் அமைந்திருந்தாலும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். உயிரிழப்பு, குடும்பத்திற்குள் விரிசல், கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை எனப் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்து விடுகிறது.

இந்த நிலையில் டிக் டாக்கில் அதிக லைக்குகளைக் குவிப்பதற்காக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பார்ப்பவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது வீட்டின் முன் போலியாக ரத்த வாந்தி எடுக்கிறார். இதை உண்மை என்று கருதிய அவ்வீட்டிலிருந்த ஒரு பெண் மற்றவர்களை அழைத்துக்கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வருகிறார். இதைப் பார்த்த அந்த நபர் சிரித்துக்கொண்டே எழுந்ததும் ஆத்திரமடைந்த அந்தப் பெண் அவரை தாக்கி கோபத்தை வெளிப்படுத்துகிறார். அந்த நபர் அவ்விடத்திலிருந்து சென்றாலும், அப்பெண் அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், மூச்சு விடவும் சிரமப்படுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதில் அந்தப் பெண் போலியாக ரத்தவாந்தி எடுத்தவரின் தாய் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள் அதிக லைக்குகளுக்காக மற்றவர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி மற்றொரு வீடியோவில் இளைஞர் ஒருவர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சி அவருக்கே வினையாக வந்து முடிந்துள்ளது.

அந்த வீடியோவில் நடு காட்டில் நடந்து வரும் அந்த நபர் தன் கையில் வைத்திருக்கும் மண்வெட்டியை மேலே தூக்கி எறிந்து விட்டு கெத்தாக செல்கிறார். ஆனால் அந்த மண்வெட்டி அவரது தலையிலேயே வந்து விழுந்து விடுகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும்போது முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் பின்னர் சிரிப்பு வந்துவிடுகிறது. எனவே, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *