மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 22 ஜன 2020

அரசியல் ஒரு ரத்த விளையாட்டு:ரணில்

அரசியல் ஒரு ரத்த விளையாட்டு:ரணில்

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்‌ஷே பதவியேற்ற நிலையில் இன்று (நவம்பர் 22) அவரது சகோதரர் மகிந்த ராஜபக்‌ஷே நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்‌ஷே தேர்தலில் வெற்றிபெற்ற உடனேயே அனைவரின் கவனமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் மீதுதான் திரும்பியது. அதிபர் பதவியேற்ற கோத்தபய ராஜபக்‌ஷே விரைவில் நாட்டுக்கு நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தப்போவதாக அறிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கே தன் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசா அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய காரணத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமுடிவு செய்தார். நவம்பர் 19 ஆம் தேதியே அதிபரை சந்தித்துப் பேசிய ரணில் அதன் பின் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த பின் தனது ட்விட்டர் பதிவில் அரசியல் என்பதற்கு ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.

’அரசியல் என்பது சதுரங்கத்தை விட அதிக....’ என்ற தலைப்பிட்டு ட்விட்டரில் ரணில் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பில் “ அரசியல் என்பதற்கு கிரிக்கெட்டைப் போல குழுப்பணி தேவை. மராத்தானைப் போல நெடுந்தூரம் ஓடுவதற்கு ஸ்டெமினா தேவை. ரக்பி (ரக்கர்) போன்ற மிகக் கடினமான விளையாட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் குத்துச்சண்டை போன்ற ரத்த விளையாட்டு” என்று கூறியுள்ளார்.

அரசியல் என்பது ஒரு ரத்த விளையாட்டு என்று ட்விட்டரில் கூறியுள்ள ரணில், இன்று (நவம்பர் 22) காலை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை சந்தித்தார். தனது கட்சித் தொண்டர்களுக்கு எதிராக ராஜபக்‌ஷே கட்சியினர் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும் அதை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை வைத்திருக்கிறார் ரணில்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon