மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 நவ 2019

வெ.இண்டீஸ் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் தோனி?

வெ.இண்டீஸ் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் தோனி?

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி கொல்கத்தாவில் நேற்று(நவம்பர் 21) அறிவிக்கப்பட்டது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, அதனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் டிசம்பர் 6ஆம் தேதியும், 2ஆவது போட்டி திருவனந்தபுரத்தில் 8ஆம் தேதியும், 3ஆவது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் 11ஆம் தேதியும், முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதியும், 2ஆவது போட்டி விசாகப்பட்டினத்தில் 18ஆம் தேதியும், 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் 22ஆம் தேதியும் நடக்கிறது.

உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அடுத்த மாத டி 20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்தியா அணிகளை நேற்று(நவம்பர் 21) மாலை அறிவித்தது.

ஒருநாள் அணி

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷம்வர்.

டி 20 அணி

விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், சம்மத் ஷாஹர்.

முகமது ஷமி கடைசியாக ஜூலை 2017 இல் நடைபெற்ற டி 20 போட்டியில் விளையாடினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பை போட்டியில், தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் ஷமிக்கு தன்னை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம், தோனி இப்போட்டியில் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. 2019 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி ஆட்டத்திலேயே வெளியேறியதில் இருந்து விளையாடாத எம்.எஸ்.தோனி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி 20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என செய்திகள் வெளியானது. குறிப்பாக, ராஞ்சியில் தோனி வலைப் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டன.

பிசிசிஐ அதிகாரி ஒருவர் இது குறித்து சமீபத்தில் கூறும் போது, ”மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு தோனி அணியில் தேர்வாவது சந்தேகமே” எனக் கூறியிருந்தார். இந்திய அணியில் தோனியின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை நீடிப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உலகக் கோப்பைக்குப் பின், தோனி தற்போது வரை இது குறித்து எந்தக் கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 22 நவ 2019