மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 நவ 2019

கிச்சன் கீர்த்தனா: விரதக் கஞ்சி

கிச்சன் கீர்த்தனா: விரதக் கஞ்சி

உணவே நம் எண்ணங்களைத் தீர்மானிக்கிறது என்று உணர்ந்த நம் முன்னோர், விசேஷ நாள்களில் உபவாசம் இருக்கச் சொன்னார்கள். உபவாசம் இருக்க முடியாத அன்பர்கள் இதுபோன்ற எளிமையான கஞ்சி, உலர்ந்த பழங்களை உண்டு தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். இப்போது விரதமிருக்கிறவர்களுக்கான சத்தான கஞ்சி இது.

என்ன தேவை?

கேழ்வரகு, உடைத்த கடலை, வேர்க்கடலை, பாசிப் பயறு (பச்சைப் பயறு), கோதுமை, அரிசி (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்

தயிர் - அரை கப்

உப்பு - தேவையான அளவு (அல்லது)

சர்க்கரை - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

எல்லா தானியங்களையும் வறுத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 3 கப் நீரைக் கொதிக்கவைத்து அதில் இந்தக் கலவை மாவைச் சேர்த்து நன்கு கிளறவும். மாவு கொதித்து கஞ்சி பதமாக வந்ததும் இறக்கிக் குளிரவைத்து உப்பு, தயிர் சேர்த்துப் பருகலாம். விரதங்கள் அதிகம் வரும் இந்த மாதத்தில் உடல் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு உள்ளவர்கள் இந்தக் கஞ்சியை அருந்தி உபவாசம் இருக்கலாம்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

சனி 23 நவ 2019