மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

தவறின் மதிப்பு 10.76 கோடி!

தவறின் மதிப்பு 10.76 கோடி!

யாரோ ஒருவர் தவறு செய்ததை சுட்டிக்காட்டினால், அதனை ஏற்றுக்கொண்டு சரி செய்வதை பெரிய மனுசத்தனம் என்பார்கள். அப்படிப்பட்ட பெரிய மனுசனாக, கூகிள் நடந்துகொள்ளத் தொடங்கி 4 வருடங்களாகிறது.

கூகிளின் ஸ்மார்ட்ஃபோன் பிக்சல் சீரீஸ் மொபைல்களைத் தொடர்ந்து ரிலீஸ் செய்து வருகிறது. கூகிள். அப்படி கூகிள் வெளியிட்ட பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்களை யாராலும் ஹேக் செய்யவே முடியாது என்று சொன்னது. ஒருவேளை அப்படி யாராவது ஹேக் செய்தால், நிறுவனத்தின் தவறை சுட்டிக் காட்டியதன் சன்மானமாக 1.5 மில்லியன் டாலர் பணத்தை பரிசாகக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது கூகிள். இந்திய மதிப்பில் 10.76 கோடி ரூபாய் பரிசை வெல்வதற்கு உலகெங்கிலுமுள்ள ஹேக்கர்கள் முயன்றுகொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் கூகிளின் வரலாறு அப்படி.

ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை கூகிள் வெளியிட்டபோது அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. அவற்றை, கூகிளின் பொறியாளர்களால் மட்டும் சரிசெய்ய முடியவில்லை. இதன் காரணமாக 2015ஆம் ஆண்டில் ‘பக் பவுண்டி புரோகிராம்’(Bug Bounty Program) என்ற செயல்முறையை அறிவித்தது கூகிள்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இப்படி பக் பவுண்டி புரோகிராமில் 28.70 கோடி ரூபாய் பணத்தை கூகிள் கொடுத்திருக்கிறது. 2019ஆம் வருடத்தில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் மேலாக ஹேக்கர்களுக்கு பரிசுப் பணத்தை வழங்கியிருக்கிறது கூகிள்.

கூகிள் வெளியிட்டுள்ள பிக்சல் சீரீஸ் ஸ்மார்ட்ஃபோன்களில் 'Titan M' என்ற புதிய வகையிலான சிப்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றை ஹேக் செய்து தகவல்களைத் திருவது மிகக் கடினமான காரியம் என்றும், எங்களது சிப்களின் புரோகிராமிலுள்ள தவறினைக் கண்டுபிடித்து ஹேக் செய்பவர்களுக்கும், புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டில் உள்ள குறைகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கும் 10.76 கோடி ரூபாய் பரிசுப் பணம் தரப்படும் என அறிவித்திருக்கிறது கூகிள்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon