Yடிசம்பர் 27, 30: உள்ளாட்சித் தேர்தல்!

public

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழலில், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தேர்தலுக்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் துவங்கியது. வாக்குச் சீட்டு அச்சிடுதல், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் கோருதல், தேர்தலுக்காக அதிகாரிகள் இடமாற்றம் என ஒவ்வொரு பணியாக மேற்கொள்ளப்பட்டுவந்தது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர் பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டி விவாதித்திருந்தார்.

இந்த சூழலில் சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தில் இன்று (டிசம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார்.

அதன்படி, டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ஆம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் 13ம் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 16ஆம் தேதி நடைபெறுகிறது. 18ஆம் தேதி வரை வேட்பு மனுவை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். 2.1.2020ல் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *