கோவை சிறுமி வன்கொடுமை: முக்கிய குற்றவாளியின் பின்னணி!

public

கோவையைச் சேர்ந்த சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளைத் தொடர்ந்து தேடி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். முக்கிய குற்றவாளியான மணிகண்டன், பப்ஸ் கார்த்திக் ஆகிய இருவரும் குடிபோதையில் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை மாவட்டம் சீரநாய்க்கன்பாளையம், பி.என்.புதூர் இடைப்பட்ட பகுதியில் ஐஸ்வர்யா நகர் உள்ளது. இங்குக் கடந்த 26ஆம் தேதி பதினோராம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி, தனது தாய்மாமன் மகனுடன்(வயது 18) ஐஸ்வர்யா நகரில் உள்ள பூங்கா ஒன்றில் பிறந்தநாளைக் கொண்டாடச் சென்றுள்ளார்.

பள்ளி முடிந்து வந்த சிறுமியும், அந்த நபரும் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சுற்றி வளைத்துள்ளது. பின்னர் அந்த பூங்காவுக்கு பின் பகுதியில் இருக்கும் ஓடைக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சிறுமியைத் தூக்கிச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.

வீட்டிற்குச் சென்றதும் இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிர விசாரணையில் குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் சீரநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல்(21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28), நாராயண மூர்த்தி(30) ஆகியோர் ஆவர். ஆனால் இவர்கள் நேரடியாக பாலியல் விவகாரங்களில் தொடர்பு இல்லாதவர்கள் என்பது விசாரனையில் தெரியவந்துள்ளது. இவர்கள் உடன் சென்றவர்கள் என்றும் வீடியோ புகைப்படங்களைத் தான் எடுத்துள்ளனர் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர்கள் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளிகளான மணிகண்டன் (28), பப்ஸ் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருவதாகத் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஐஸ்வர்யா நகர் பகுதி மக்கள் கூறுகையில், இருவரும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர், மணிகண்டன் மீது கொலை வழக்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை காவல் ஆணையர், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறினார். மேலும், “ஐபிசி 506, போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதானவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளை ஆய்வு செய்ததில் அதில் வீடியோக்கள் எதுவும் இல்லை. முக்கிய குற்றவாளிகளைத் தேடி வருகிறோம், அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, அவர்களின் செல்போன்களும் ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *