ஹெச்.டி.எஃப்.சி. நெட் பேங்கிங் டவுன்! பிசினஸ் பிளஸ்!

public

முக்கியமான தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடக்கப்பட்டதையடுத்து அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் இதை ட்விட்டரில் டிரண்ட் ஆக்கிவிட்டார்கள்.

ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் இணைய, மொபைல் பயன்பாடுகள் டிசம்பர் 2 திங்கள்கிழமை காலை முதல் அதன் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவில்லை. வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் அணுகவோ மொபைல் பேங்கிங் மூலமாக அணுகவோ முடியவில்லை. பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இன்றும் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வாடிக்கையாளர்கள் ட்விட்டரில் தங்களது அவஸ்தைகளை அள்ளிக் கொட்ட ஆரம்பித்தனர். இதன் பின் வங்கி நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில், “ தொழில்நுட்ப குறைபாடு காரணமாக வங்கியின் சில வாடிக்கையாளர்கள் நிகர வங்கி மற்றும் மொபைல் பயன்பாடுகள் வழியாக தங்கள் கணக்குகளில் உள்நுழைய முடியவில்லை என்று கூறினர். எங்கள் வல்லுநர்கள் இதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், விரைவில் சேவைகளை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். என்று தெரிவித்துள்ளது.

மாதத்தின் முதல் நாள் என்பதால் பல வாடிக்கையாளர்கள் தங்களது மாதாந்திர பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் 4.5 கோடி வாடிக்கையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆன் லைன், மொபைல் பேங்கிங் கிலேயே இருப்பதால் ஒரே நாளில் இந்த விவகாரம் விவாதிக்கப்படும் அளவுக்குப் பெரிதாகிவிட்டது.

இந்த சிரமம் இன்றோடு முடியுமா நாளையும் தொடருமா என்றும் ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் குடைந்துகொண்டிருக்கிறார்கள். ஹெச்.டி. எஃப்.சி. வங்கியைப் பொறுத்தவரை பாதகத்திலும் ஒரு சாதகமாக, வங்கியின் சிறு தொழில் நுட்பக் குறைபாடு கூட பேசுபொருளாகிவிட்டது என்பது பிசினஸ் ரீதியில் இன்னொரு பிளஸ்தான்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *