Lநித்தியின் பாத பூஜை பிசினஸ்!

public

நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று கர்நாடக ராம்நகர் நீதிமன்றம் கேட்கிறது… இந்திய வெளியுறவுத்துறை எங்களுக்கு தெரியாது என்கிறது. தி கார்டியன் இதழுக்கு விளக்கம் அளித்துள்ள ஈக்வடார் நாட்டின் அரசு அதிகாரி அவர் ஈகுவெடார் நாட்டில் இருந்து ஹைட்டி நோக்கி பயணப்பட்டு விட்டார் என்கிறது.

இப்படி நித்தி எங்கு இருக்கிறார் என்பதே ஒரு விவாதத்துக்குரிய கேள்வியாக மாறியிருக்கும் நிலையில் இன்றும் அவருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நித்தி இன்று எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. ஆனாலும் காலை எழுந்தவுடன் அவர்கள் எங்கிருந்தாலும், நித்யானந்தா எங்கிருந்தாலும் பாத பூஜை மட்டும் நடந்துகொண்டே இருக்கும்.

நித்யானந்தாவின் சீடர்கள் ஆசிரமத்தில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் தினமும் காலை 4.30க்கு எழுந்து குளித்துவிட்டு யோகா,தியானம் முடித்துவிட்டு 7 மணிக்குள் பாதபூஜை செய்யத் தொடங்கிவிடுவார்கள். நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்தால் அனைவரும் அவருக்கு பாத பூஜை செய்வார்கள். அவர் ஆசிரமத்தில் இல்லையென்றால் அவரது சிலைக்கு பாத பூஜை நடக்கும். சீடர்கள் பலர் வெளியூர்களில், வெளிநாடுகளில் இருக்கிற பட்சத்தில் அந்த அதிகாலை நேரத்தில் நித்யானந்தரின் புகைப்படத்தை எடுத்து சாய்த்து வைத்து அந்த படத்துக்கு பாத பூஜை செய்துகொண்டிருப்பார்கள்.

எப்படி தேர்டு ஐ என்பது நித்திக்கு ஒரு ஆன்மீக மார்க்கெட்டிங் கருவியாகிவிட்டதோ, அதேபோல பாதபூஜை செய்வதும் ஒரு பிசினஸ் ஆகிவிட்டது. பாத பூஜை என்பதற்கு நித்யானந்தா கொடுத்த விளக்கத்தில்தான் பலர் உலகம் பூராவும் கட்டுண்டுவிட்டனர்.

“நமது வேத பாரம்பரியத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு ஞான நுட்பங்களுள், குருவுக்குப் பாத பூஜை செய்வது என்பது முக்கியத்துவம் மிக்க தலையாய நுட்பமாக திகழ்கிறது.

நமது வேத கலாச்சாரப்படி, ஒரு குழந்தை, தன் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும், அது உள் உலக விஞ்ஞானமாகட்டும் அல்லது வெளி உலக விஞ்ஞானமாகட்டும், குருவின் காலடி அருகில் அமர்ந்துதான் கற்றுக்கொள்கிறது. தன் விழிப்பணர்வு நிலையை உயர்த்திய ஞான குருநாதருக்கு சீடர் செலுத்தும் ‘நன்றியுணர்வு’தான் பாத பூஜை. இவ்வுலகில் பெற்றிருக்கும் அனைத்திற்குமே நாம் தகுதியானவர்கள் இல்லை, நாம் பெற்றிருக்கும் அனைத்துமே பரிசுகளாக நம்மீது பொழியப்பட்டவைதான் என்பதைப் புரிந்துகொண்டு, நன்றியுணர்வை குருவின் பாதங்களில் சமர்ப்பியுங்கள். நன்றியுணர்வு, இந்த ஒரு குணம் போதும், இது நம்மை எல்லாத் துக்கங்களில் இருந்தும், பந்தங்களில் இருந்தும் விடுபடுத்திவிடும்.

ஆதிசங்கரர் தம்முடைய ‘குரு அஷ்டகத்தில்’ மிக அழகாகச் சொல்கிறார்: குருவின் பாதங்களில் சரணாகதியடைவதுதான், நம் வாழ்வில் நிகழும் உச்சபட்ச மிக அழகான ஒரு நிகழ்வாகும்”என்கிறார் நித்யானந்தா.

ஒவ்வொரு நாளும் நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் இருக்கும்போது அவருக்கு நடக்கும் பாத பூஜை நிகழ்வை முக்கியமான சிலர் செய்வார்கள். அதை கிரிக்கெட், கால் பந்து ஆட்டத்தைப் பார்க்கும் ரசிகர்கள் போல பக்தர்கள் சுற்றிலும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

பாத பூஜைக்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. குருவின் பாதத்துக்கு சந்தனம் பூசுதல், வாசனை திரவியங்கள் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

பாத பூஜை பற்றிய நித்தியின் சொற்பொழிவை கனடா தலைநகர் டொரண்ட்டாவில் இருந்தும், ஆஸ்திரேலியாவில் இருந்தும், டெல்லியில் இருந்தும் பார்த்து உருகும் பக்தர்களுக்கு அடுத்த நோக்கம் என்னவாக இருக்கும்?

நாம் எப்போது நித்யானந்த சுவாமியின் அருகே இருந்து அவருக்கு நேரடியாக பாத பூஜை செய்யப் போகிறோமோ என்ற ஆவலை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் அந்த நிகழ்ச்சிகள். ஆம்…முதலில் நீர், பின் மலர்கள், தேன், சந்தனம், நகைகள், வாசனை திரவியங்கள், புதிய துணிகள் என்று நித்தியின் பாதங்களுக்கு சிறப்பு பூஜைகள் ஒரு திருவிழா போலவே நடக்கும்.

இதைப் பார்க்கும் எந்த ஒரு நித்தியின் பக்தருக்கும் இதை நாம் பிடதி சென்று நேரடியாக செய்யமாட்டோமா என்ற ஆர்வம்தான் பிறக்கும்.

அப்படி ஆர்வம் இருப்பின் நீங்கள் அதற்கு முன் பதிவு செய்துகொள்ள வேண்டும். முன் பதிவு செய்துகொள்ள உங்களிடம் கிரடிட் கார்டு இருக்க வேண்டும். அப்படியென்றால்…

(நித்தி சர்ச்சைகள் நீளும்)

[நித்தி மீட்டும் ஆன்மீக ஹார்மோன்](https://minnambalam.com/k/2019/12/09/13)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *