{கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு வெஜிடபுள் புட்டு!

public

வெங்காய அரசியல் தாக்கம் இந்தியாவில் மட்டுமல்ல; சர்வதேச அளவிலும் பிரதிபலித்திருக்கிறது. அண்மையில் இந்தியா வந்திருந்த வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா ஒரு மேடையில், “ஏன் என்று தெரியவில்லை… இந்தியா வெங்காய ஏற்றுமதியை செப்டம்பர் மாதம் நிறுத்திவிட்டது. நான் எங்கள் வீட்டுச் சமையற்காரரிடம், ‘வெங்காயத்தை அதிகம் பயன்படுத்தாதீர்கள்’ என்று சொல்லிவிட்டேன். இனிமேல் இத்தகைய முடிவுகளை முன்கூட்டியே சொல்லிவிட்டு செய்தால் நன்றாக இருக்கும். திடீரென செய்யும்போது கடினமாக இருக்கிறது. இதுவரை பழகிய ஒன்றை மாற்றிக்கொள்வது எளிதல்ல’’ என்று நகைச்சுவையோடு அரசியல் முரணை முன்வைத்தார் ஷேக் ஹசினா. இப்படிப்பட்ட நிலையில் சுவையான இந்த பிரேக்ஃபாஸ்ட் ரெசிப்பி, வெங்காயம் இல்லாத குறையைப் போக்கும்.

**என்ன தேவை?**

கேரட் சிறியது – ஒன்று

பீன்ஸ் – 4

பச்சை பட்டாணி – 25 கிராம்

காலிஃபிளவர் – கால் கப்

உருளைக்கிழங்கு சிறியது – ஒன்று

கடலை எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு – சிறிதளவு

பூண்டு – 5 பற்கள்

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

மல்லித்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரிசி மாவு – ஒரு கப் (100 கிராம்)

**எப்படிச் செய்வது?**

காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, பூண்டு, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும். இதனோடு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலந்துவிடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். 75 சதவிகிதம் காய்கறிகள் வெந்ததும் தீயை அணைத்துவிடவும். பிறகு, அரிசி மாவுடன் உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து, உதிரியாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையோடு வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து, இட்லி குக்கர் அல்லது புட்டு மேக்கரில் 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். காய்கறி புட்டு தயார். இத்துடன் தேங்காய்ச் சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.

[நேற்றைய ரெசிப்பி: பஜ்ஜி மிளகாய் சாதம்](https://www.minnambalam.com/k/2019/12/11/13)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *