uகாரம் இருக்கே உப்பு இருக்கா? அப்டேட் குமாரு

public

‘வெங்காயம் விலை ஏறிப்போச்சேன்னு எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்போம். இப்போ பாத்தீங்களா காரமான எகிப்து வெங்காயத்த கொண்டு வந்து மிளகாத்தூள் போடாமலே சமைக்கிறதுக்கு வழி பண்ணியிருக்காங்க. அது மட்டுமா இதயத்துக்கு கூட நல்லதாமே. அப்போ, இனி நம்ம தமிழ்நாட்டில ஹார்ட் பேஷண்ட்ஸே இருக்கமாட்டங்க இல்லே’ன்னு டீக்கடை அண்ணாவ பாத்து என் ஃப்ரெண்டு கேட்டிட்டு இருந்தான். அதுக்கு அவரு ‘ஆமாப்பா, நான் கூட இனிமே வெங்காய பஜ்ஜி ஒண்ணு 25 ரூபான்னு விக்கலாம்னு இருக்கேன். கடைக்கு வெளிய “இதயத்துக்கு எனெர்ஜி தரும் ஸ்பெஷல் எகிப்து வெங்காய பஜ்ஜி இங்கு கிடைக்கும்ன்னு”ஒரு போர்ட வேற மாட்டப் போறேன்’னு சொல்றாரு. ‘அது இருக்கட்டும் அண்ணே, காலைல நியூஸ பாத்திட்டு சல்பர்ல காரம் இருக்கே, உப்பு இருக்குமான்னு பாக்க கூகுள்ல தேடிப்பாத்தேன். அதில என்னடாண்ணா சல்பருக்கு டேஸ்டே இல்லன்னு போட்டிருக்கு. கூடவே பூச்சிக்கொல்லி, வெடி மருந்து, தீக்குச்சி செய்றதுக்கு எல்லாம் யூஸ் ஆகும்னு வேற போட்டிருக்கு. நீங்க ஒண்ணு பண்ணுங்க இதயத்துக்கு எனெர்ஜின்னு மட்டும் போடாம, உங்க வயிற்றில இருக்கும் பூச்சிகளையும் கொல்லும் சல்பர் கலந்த வெங்காயம்னும் போடுங்க. இன்னும் வியாபாரம் பிச்சுக்கும்’ன்னு இன்னொருத்தர் சொல்லிட்டு போறாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் எகிப்து ஆனியன் ரெசிபின்னு கூகுள்ல தேடிட்டு வர்றேன்.

**மெத்த வீட்டான்**

தாய் நாட்டை தந்தை நாடாக்க முயற்சி நடக்கிறது.

– கமல்

இதுக்கு என்ன அர்த்தம்னு புரிந்துக்கொள்ள கடும் முயற்சி தேவை !

**யுகராஜேஸ்**

எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது;

எடப்பாடியே அறுத்து சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார்-செல்லூர் ராஜீ# இந்தாளு…எடப்பாடிக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை ‘MBBS டாக்டர்’ பட்டம்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு போல..!!

**ஷிவானி சிவக்குமார்**

வாக்கு வங்கி குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை; மக்களின் நலன்களுக்காகவே நான் எப்போதும் உழைக்கிறேன்” – மோடி

அம்பானி அதானியோட மக்களுக்குதானே.!? தெரியும் ஜி

**சரவணன்.**

எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது – அமைச்சர் செல்லூர் ராஜூ.

உப்பு தூக்கலாக இருக்கும் பொருட்களை சாப்பிட்டால் தன்மானத்திற்கு நல்லது என்பது தெரியுமா…?

**இதயவன்**

எந்தவொரு செயலை செய்தாலும் தந்தை சூப்பர் மேனாகவே தெரிவார் மகள்களுக்கு..!!!!

**கருப்பு மன்னன்**

இனிமே நெஞ்சி வலிச்சா எகிப்து வெங்காயம் தான் சாப்பிடணும் சரியா !!

**Dr.சங்கத்தமிழன்**

டாக்டர் பட்டம் கிடைத்த வுடன் பரிசோதனையை ஆரம்பித்து விட்டீர்கள் போல

டாக்டர்

**இதயவன்**

தமிழ்நாட்டில் தண்ணி குடிச்சவர் எல்லாம் தமிழர் தான் – S.A. சந்திரசேகர்

தண்ணி குடிச்சவங்களா அடிச்சவங்களா ?!!!

**SHIVA SWAMY.P**

கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டமுடியாத இடத்தில் மௌனமாக சிரித்துவிட்டு நகர்ந்தால்,

என்றாவது ஒருநாள் அதற்காக வெட்கப்படும் நிலை வராமல் தவிர்க்கலாம்!!

**எனக்கொரு டவுட்டு**

இந்தியாவில் இன்னொரு பாரதி உருவாவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது – இல.கணேசன்

அவருக்கும் காவி கலர் பூசவா..!

**கருப்பு மன்னன்**

நதிகளை தேசிய மயமாக்கினால்தான் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சனைகளை தீர்க்க முடியும். – மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

மஹா பிரபு அதுக்குள்ள உங்களுக்கு புது அசைன்மெண்ட் கொடுத்துட்டாங்களா

**அழகிய கவிதை**

பாடல்: மழை பேஞ்சா தானே மண் வாசம்.. உன்ன நெனச்சாலே பூ வாசம் தான்

நான்: நமக்கு மழை பேஞ்சாலே பஜ்ஜி போண்டா வாசம் தான் வருது..

**கோழியின் கிறுக்கல்**

முறுக்கின் சுவை அதன் வடிவத்தில் இல்லை,

அதே போல் தான் மனிதனின் திறமையும் அவன் உருவத்தில் இல்லை!!

**விடியல் வினோத்**

நேரத்தைச் சரியாக நிர்வாகம் செய்ய தெரிந்தவர்களே , தன்னுடைய பணியைக் குறித்த நேரத்திலும், பதற்றம் கொள்ளாமலும் நிறைவு செய்கின்றனர்.

**ச ப் பா ணி**

ஒரு பெரிய அரசியல்வாதி பேசி,பேசி நள்ளிரவு தாண்டிவிட்டது.எல்லோரும் சென்றபிறகு ஒரே ஒருவர் மட்டும் இருந்தார்.நீதான் உண்மை தொண்டன்..அவரை பாராட்டும் போது

அவன் சொன்னான்..

ஏமாற்றமடைந்து விடாதே.நான் அடுத்த பேச்சாளன் என்றான்

**ஜோக்கர்**

நிரூபித்து கொண்டே இருக்கும்வரை,

உன்மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு கொண்டேயிருக்கும்..!!!

**பாட்டி வைத்தியம்**

உடல் சூட்டைக் கட்டுப்படுத்த, ரத்தவோட்டத்தைச் சீராக்க, வளர்சிதை மாற்றப் பணிகளை ஒழுங்குபடுத்த கிராம்பு உதவுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பின் அளவையும் இது கட்டுப்படுத்துகிறது.

**கோழியின் கிறுக்கல்!!**

காஷ்மீரை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களிலும் இணைய சேவைகள் முடக்கிடாங்க!!

புறா வளர்க்க ஆரம்பிக்கணும் போல!!

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *