Wஇனி இந்த போன்களில் நோ வாட்ஸ் அப்!

public

ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு, ஒரு நாளைக்கு இத்தனை குறுஞ்செய்திகள், அதிலும் குறிப்பாக இத்தனை எழுத்துக்கள் என்று கட்டுப்பாடுகளிலிருந்து நம்மை விடுவித்தது வாட்ஸ் அப்.

கணக்கற்ற விதத்தில் மற்றவர்களுடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் சந்தோஷம் தீருவதற்குள்ளாகவே, வாட்ஸ் அப் குரூப்பில் பலருடன் செய்திகளைப் பரிமாறும் வசதி, சென்றடைந்த செய்திகளை உறுதிப்படுத்தும் குறியீடு, ஆடியோ கால் என பல விதங்களிலும் அப்டேட்டாகி வரும் வாட்ஸ் அப், தற்போது வீடியோ கால்களைப் பலருடன் ஒரே நேரத்தில் பேசும் அளவுக்கு வந்து நிற்கிறது.

அப்டேட் என்ற ஒன்றுக்குத்தான் முடிவு என்பதே இல்லையே. எனவே இன்னும் பல வகைகளில் தன்னை மெருகேற்றிக்கொண்டிருக்கிறது வாட்ஸ் அப். சில புதிய விஷயங்களைப் பெறும்போது ஒரு சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

எனவே புதிய அப்டேட் உடன் வர இருக்கும் வாட்ஸ் அப், சில மொபைல்களில் இயங்காது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது வாட்ஸ் அப் டீம். வரும் 2020 பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஆண்ட்ராய்டு 2.3.7 மாடல் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது. மற்றும் ஆப்பிள் ஐபோன்களில் iOS 8 மற்றும் அதற்கு முந்தைய மாடல்களிலும் இனி இயங்காது.

இந்த இரண்டு போன்களை தவிர, எந்தவிதமான விண்டோஸ் போன்களிலும் வாட்ஸ் அப் 2020 ஜனவரி 1 முதல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதுவரை செய்திருக்கும் தகவல்களைச் சேமித்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது வாட்ஸ் அப், ஆனால் புதிய செய்திகளை அனுப்பவோ பெறவோ புதிய கணக்கைத் தொடங்கவோ முடியாது என்று தெரிவித்துள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *