டிஜிட்டல் திண்ணை: அதிருப்தியில் வேலுமணி…என்ன பின்னணி?

public

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.லொகேஷன் கோவை காட்டியது.

“தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்துப் பேசியதாக சி.பி.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டரில் படத்துடன் தகவல் வெளியிட்டிருந்தார். இந்தத் தகவலைப் பார்த்த மற்ற ஊடகத்தினர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவியான நியூஸ் ஜெ தொலைக்காட்சி தரப்பினரைத் தொடர்புகொண்டு, ‘ஏம்ப்பா இப்படி ஒரு சந்திப்புனு சொன்னா நாங்க வந்திருப்போமே?’என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் தரப்பில், ‘எங்களையே வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. இதில் மினிஸ்டருக்கு இன்ட்ரஸ்ட் இல்லை போல. சிபிஆர் டிவிட்டரில் படத்தைப் போட்டுட்டதாலதான் தெரிஞ்சிருக்கு’ என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கோவை மாவட்டத்தில் நடக்க வேண்டிய அத்தனை பணிகளையும் கவனிக்க வேண்டியவர் எஸ். பி. வேலு மணிதான்.ஆனால் சில நாட்களாகவே அவர் ஏதோ அப்செட்டில் இருக்கிறார் என்கிறார்கள் அவரைச் சுற்றியுள்ளவர்கள்.

நாம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் கே.பி.முனுசாமி இல்ல நிகழ்ச்சியைப் புறக்கணித்த எடப்பாடி என டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், ‘நேற்று (டிசம்பர் 7) மதியம் 12.30 மணியளவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்ற, எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர் வேலுமணி சுமார் அரை மணிநேரம் அவருடன் பேசிவிட்டு வீட்டிலிருந்து டென்ஷனாக வெளியேறியுள்ளார். உள்ளுக்குள் என்ன விஷயங்கள் நடந்ததென தெரியவில்லை. அதன் பிறகு விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து கோவை சென்றுவிட்டார். எப்போதும் சிரிப்போடு செல்பவர் நேற்று இறுக்கமான முகத்துடன் சென்றார்’ என்று தெரிவித்திருந்தோம். அந்த அப்செட் தான் இன்னும் நீடிப்பதாக கோவை வட்டாரத்தில் சொல்லுகிறார்கள்.

என்ன அப்செட் என்றால் சமீப காலமாக கோவை முழுதும் நம்ம கோவைன்னா ஸ்மார்ட்டுங்க, என்றும், 5/50 என்றும் வேலுமணியை மையப்படுத்தி போஸ்டர்கள் கலக்கி வருகின்றன. அதாவது 50 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை 5 ஆண்டுகளில் கோவையில் சாதித்துவிட்டதாக அந்த போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே கோவை வட்டாரத்தில் எஸ்.பி வேலுமணியைத்தான் ஆக்டிவ் முதல்வர் என்று அதிமுகவினரே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக கோவையில் நடக்கும் வேலுமணி ப்ரமோஷன்கள் எடப்பாடியின் கவனத்துக்கும் போயிருக்கின்றன. எடப்பாடி இதுபற்றி அதிருப்தி ஆகி ஒபிஎஸ்சிடம் பேசியிருக்கிறார்.

அதன் பின்னர்தான் ஓபிஎஸ் வேலுமணியை அழைத்துப் பேசியிருக்கிறார். ‘எம்.ஜிஆர். ஆட்சி பண்ணியிருக்காரு, அம்மா ஆட்சி பண்ணியிருக்காங்க. அவங்க காலத்துல பண்ணாததையா நாம பண்ணிடப் போறோம்னு நம்மளப் பத்தி தப்பா நினைக்கப் போறாங்க’ என்று வேலுமணியிடம் கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.அதற்கு வேலுமணி,கோவையில் நடந்துகொண்டிருக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விளக்கிவிட்டு, வெறும் விளம்பரமெல்லாம் பண்ணலை. உள்ளதைத்தான் பண்றோம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

அதிலிருந்தே வேலுமணி கொஞ்சம் அப்செட் ஆக இருப்பதாகச் சொல்கிறார்கள்.ஆனாலும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை அதிமுக நிர்வாகிகள் மூலம் செய்துவருவதாகவும் சொல்கிறார்கள் வேலுமணி வட்டாரத்தில். ஏற்கனவே சிலமுறை முதல்வருக்கும் வேலுமணிக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பிறகு அது சரியாகியிருக்கிறது. இப்போது வேலுமணி தனக்கான தனிப்பட்ட ப்ரமோஷனை தனி டிராக்கில் எடுத்துச் சென்றிருப்பதுதான் தற்போதைய நிகழ்வுகளுக்குக் காரணம் என்கிறார்கள் கோவையில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *