‘நாக்கு’அடங்க ரிலீஸ் பண்ணவாச்சும் வழி சொல்லுங்க: அப்டேட் குமாரு

entertainment

கம கமன்னு வந்த சிக்கன் குழம்பு வாசனையில தான் காலையில கண்ணே முழிச்சேன். நூறு நாள் ஊரடங்கு நேரத்தில சிக்கன், மட்டன், மீன், இறால், நண்டுன்னு எல்லாத்தையும் ஒதுக்கி ‘நாக்கடங்கு’ பண்ணி வச்சிருந்த எனக்கு அந்த வாசனை பல கற்பனைகளை மூளைக்குள்ள ஓட விட்டுச்சு. எல்லாத்துக்கும் சேத்து வச்சு இன்னைக்கு சாப்பிட்டிரணும்னு ஒரு முடிவோடப் போய் சீக்கிரம் பல்ல விளக்கி குளிச்சிட்டு கிச்சனுக்குப் போனேன். ‘சிக்கன் குழம்புக்கு மெயின் டிஷ் என்னமா? இட்லியா? சப்பாத்தியா?’ன்னு அம்மாகிட்ட கேட்டா ‘இன்னைக்கு நம்ம வீட்டில சிக்கனே இல்லையேடா’ன்னு ஒரு இடிய தூக்கிப் போடுறாங்க. ‘என்னம்மா சொல்றீங்க. வாசனை வந்துச்சே’ன்னு ஷாக்காகி கேட்டா, ‘அதுவா, உருளைக்கிழங்கு கிரேவில வெரைட்டியா இருக்கட்டுமேன்னு சிக்கன் மசாலா போட்டு வச்சேன். நேத்து யூட்யூப் வீடியோல பாத்தேண்டா’ன்னு சொல்றாங்க. நீங்க அப்டேட்ட படிங்க. நான் சோகமா கொஞ்ச நேரம் உக்காந்திட்டு வர்றேன்.

**சரவணன். ℳ**

குளுக்கோஸ் ஸ்டேண்ட் இல்ல, டாக்டர் இல்ல, நர்ஸ் இல்ல, கேஸ் சிலிண்டர் இல்ல, துணி அழுக்கா இல்லன்னு கேள்வியா கேக்கறீங்களே…?

முதல்ல இது ஆஸ்பிட்டலே இல்லையே…

வெறும் ஆஸ்பிடல் செட்டிங் தானேய்யா…!

**ஊர்க்காவலன்**

காலுக்கு கீழே இருந்தாலும் ‘கிக்’ கான வாழ்க்கை..

‘ஃபுட் பால்’க்கு…

**ச ப் பா ணி**

கோரோனா வேகமா பரவுகிறது

ஆனால் சமூகப் பரவல் இல்லை

**எனக்கொரு டவுட்டு ⁉**

நல்லா தூங்கிட்டு இருப்போம், எழுப்பி விடுவாங்க. எழுப்புறதுக்கு அப்டி என்ன அவசரம்னு பார்த்தா போட்டிருக்குற அழுக்கு ட்ரெஸ்ஸை கழட்டி கொடு துவைக்கணும்னு சொல்வாங்க பாரேன்.. 🙁

**ச ப் பா ணி**

மாப்பிள்ளை வீட்ல ஒரே ஒரு டிமாண்ட் தானாம்..அவங்க சைடு ஐம்பது பேருக்கு நாமதான் இ-பாஸ் எடுத்துத்தரனுமாம்.

**மாஸ்டர் பீஸ்**

ஐஸ்கிரீம் வாங்கினா உடனே சாப்பிடணும் இல்லன்னா உருகிப்போயிடும்,

வாழ்க்கையும் அப்படித்தான்!!!

**ச ப் பா ணி**

வந்தாரை “வார்டில்” வைக்கும் தமிழகம்.!

**amudu**

“நானெல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவன்” என்று பேசுபவர்களின் தலைக்கனத்தை குறைக்க கண்டுபிடிக்கப்பட்டது தான் “சீட் லெஸ்” பழங்கள்.

**ரமேஷ்.ஏ**

நம்ம ஒரு கேள்வி கேட்டு பதில் சொல்லமுடியாம மனைவி திகைத்து நின்னாங்கன்னா ஏதோ உலகத்தையே ஜெயிச்ச மாதிரி ஒரு உணர்வு உள்ளுகுள்ள வந்துடுது..!!!

**மயக்குநன்**

எந்த வல்லரசுக்கும் இந்தியா அடிபணியாது!- மோடி.

இது… ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை மேல சத்தியம்..!

**பாலசுப்ரமணி**

அண்ணே இப்போல்லாம் நான் டிவில “ஜான் சீனா” மேட்சை எல்லாம் பாக்குறதே இல்லணே

ஏன்டா ?

அவரோட பேர்லயே சீனா இருக்கு. அதான் சீனாவுக்கு பதிலடி கொடுக்கத்தான்ணே பாக்குறதில்ல

**-லாக் ஆஃப்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *