வாழ்: சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள சுகமான டீசர்!

public

ஒரு டிரெய்லர் உருவாக்கப்படுவதன் நோக்கமென்பது, படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை பார்ப்பவர்களுக்கு தூண்டவேண்டியது என்றால், ‘வாழ்’ திரைப்பட டீசரே அந்த காரியத்தை சிறப்பாக செய்துவிட்டது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வாழ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி கிட்டத்தட்ட டிரெண்டிங் லெவலுக்குச் சென்றுவிட்டது.

கோர்வையில்லாத காட்சிகளின் தொகுப்பாக வந்திருந்தாலும், ஒவ்வொரு காட்சியும் படத்தின் ஏதோவொரு முக்கியமான தருணத்தைக் காட்டுவதாகத் தெரிகிறது. அந்தத் தருணம் என்னவாக இருக்கும் என்பதை, பெரிய ஸ்கிரீனில் பார்க்கலாமே என நினைக்கும் விதத்தில் படத்தின் ஒளிப்பதிவு அசாத்தியமாக இருக்கிறது. மிக மெதுவாக நகரும் காட்சிகளாக இருந்தாலும், அதன் ஆடம்பரம் அமர்க்களமாக இருக்கிறது. ஏரியல் வியூ ஷாட்களும், ட்ரோன்களில் எடுக்கப்பட்ட ஷாட்களும் மனதை நிறைவடையச் செய்கின்றன.

டீசரின் ஒரு பகுதியில் பொறியியல் படித்த இளைஞன் மார்க்கெட்டிங் வேலைக்குச் செல்வதாகவும், கதாநாயகனை ஆணாதிக்கவாதியாகவும், அவனது செயல் தொலைக்காட்சிகளில் விவாதிக்கும் அளவுக்கு அமைந்துவிட்டதையும் காட்டுகிறது. மற்றொரு பகுதியில் தனது மகனுடன் பயணங்களை மேற்கொள்ளும் பொறுப்பான தந்தையாகவும் காட்டுகிறது. கடைசியில் கேம் விளையாடிக்கொண்டிருக்கும் பொறுப்பற்றவராகவும் காட்டுகிறது. இப்படி பல உணர்வுகளைக் கொடுக்கும் வாழ் படத்தின் டீசர் சொல்லாததை டிரெய்லரும், படமும் சொல்கிறதா எனப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் தன்னாலே ஏற்படுகிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *