மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 ஜன 2020

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்

தினந்தோறும் அசைவ உணவு... நல்லதா, கெட்டதா?

காலங்காலமாக அசைவம் சாப்பிடும் பழக்கம், இங்கு பெரும்பான்மையானவர்களிடம் இருக்கிறது. ஆனால், கடா வெட்டும் கோழிக் குழம்பும் எப்போதாவதுதான் கிடைக்கும். இன்று அப்படி இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் ஹோட்டல்கள், ரெஸ்ட்டாரன்ட்டுகள். ஒரு போன் செய்தால் போதும் கிரில்டு சிக்கனும், மட்டன் கோலாவும், ஃபிங்கர் ஃபிஷ்ஷும் நம் வீடு தேடி வந்துவிடும். காசிருந்தால், தினம் தினம் விருந்துதான்.

இது ஒருபக்கம் என்றால், பேலியோ போன்ற புதிய புதிய டயட் முறைகள் இன்னொரு பக்கம். `கார்போஹைட்ரேட்டே வேண்டாம். அரிசியே வேண்டாம். தினமும் கொழுப்பு நிறைந்த உணவுகளையே சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக இருக்கலாம்’ எனப் புரட்சிகரமான கோஷங்களும் படையெடுக்கின்றன.

இப்படிப்பட்ட நிலையில் அன்றாடம் அசைவ உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா... தினமும் அசைவம் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும்?

நமது உடல் ஆரோக்கியமாக இயங்க கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், நுண்ணூட்டச்சத்துகள் என ஒவ்வொன்றுமே மிகவும் அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்று குறையும்போதும் நம் உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

நாம் உண்ணும் உணவை நம் உடல் கொழுப்பாக மாற்றி வைத்துக்கொள்ளும். உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது கொழுப்பை உடைத்து, தனக்குத் தேவையான ஆற்றலை உடல் தயாரித்துக்கொள்ளும். தினசரி அசைவம் சாப்பிடும்போது, நம் உடலுக்குக் கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய்கள் போன்றவற்றுக்கு உடல்பருமன்தான் தலைவாசல்.

அசைவத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இது இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஒருவேளை சாப்பிட்டால் அடுத்த வேளை பசிக்க வேண்டும். எவ்வளவு ‘ஹெவி’யாகச் சாப்பிட்டாலும் அதிகபட்சம் நான்கு மணி நேரத்தில் செரிமானப் பணிகளை முடித்துக்கொண்டு, வயிறு அடுத்த வேளைக்கு உணவைத் தேட வேண்டும். அப்படி நிகழ்ந்தால் நீங்கள் சாப்பிட்டது நல்ல உணவு. மதியம் சாப்பிட்ட உணவு இரவு வரை செரிக்காமல், அவஸ்தை கொடுத்தால் உடம்புக்குச் சேராத ரசாயனங்களையும் நீங்கள் சேர்த்துச் சாப்பிட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை நிறத்துக்காகவும் ருசிக்காகவும் சேர்க்கிற சில பொருள்கள் நாவுக்கு இதமாக இருக்கும். ஆனால், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைச் சிதைத்துவிடும். அதன் விளைவுகளை, சில மணி நேரத்திலேயே உடல் நமக்கு உணர்த்திவிடும்.

வீட்டில் செய்யப்படும் உணவானாலும் வாரத்தில் எத்தனை நாட்கள் அசைவ உணவுகள் சாப்பிடலாம்... தினந்தோறும் அசைவ உணவை நம் உடல் ஏற்றுக்கொள்ளுமா?

இதுகுறித்து உணவியல் நிபுணர்களிடம் விசாரித்தபோது, “வாரத்தில் மூன்று நாட்கள் மீன் சாப்பிடலாம். பொரித்துச் சாப்பிடக் கூடாது. மீனைக் குழம்பாக வைத்துதான் சாப்பிட வேண்டும். கடல் மீன்களைவிட, ஏரி குளங்களில் கிடைக்கிற மீன் இதயத்துக்கும் மூளைக்கும் நல்லது.

பிராய்லர் சிக்கனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மட்டன், நாட்டுக்கோழி என்றால் வாரத்தில் ஒருநாள் சாப்பிடலாம். நாட்டுக்கோழியையும் தோலை உரித்துவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்.

முட்டையைப் பொறுத்தவரை ‘வெள்ளைக்கரு மட்டும்’ என்றால் தினமும் ஒன்று சாப்பிடலாம். முழு முட்டை என்றால் வாரத்துக்கு இரண்டு முட்டை என்ற கணக்கில் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் முழு முட்டை கொடுக்கலாம். அசைவ உணவுகள் சாப்பிடும் நாள்களில் பால், பருப்பு போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது” என்கிறார்கள்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

ஞாயிறு 12 ஜன 2020