மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 24 பிப் 2020

அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் டகால்டி!

அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் டகால்டி!

சந்தானம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் டகால்டி திரைப்படம். இதுவரை எந்த சந்தானம் படமும் தொடாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. முதல் முறையாக தமிழகமெங்கும் 475+ திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு-2 மற்றும் A1 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, டகால்டி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டுவர தயாரிப்பு தரப்பு எடுத்துள்ள முயற்சியே இது. கடந்த மாதம் டகால்டி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

டகால்டி திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் எழுதி இயக்குகிறார், இவர் இயக்குனர் ஷங்கரின், முன்னாள் உதவி இயக்குனர் ஆவார். இப்படத்தின் மூலமாக, பாடகர் விஜய் நரேன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ரித்திகா சென் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முதல்முறையாக சந்தானத்துடன் யோகிபாபு இணைந்து நடிக்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு செய்ய, தீபக் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். முழுக்க முழுக்க கமெர்ஷியல் திரைப்படமாக தயராகி இருக்கும் இத்திரைப்படத்தை எஸ்.பி.சௌத்ரி தயாரித்து இருக்கிறார்.

இந்நிலையில் டகால்டி வெளியாகும் அதே நாளில், சந்தானம் நடிப்பில் தயாராகி மூன்று வருடங்களாக வெளியாகாமல் இருந்த சர்வர் சுந்தரம் திரைப்படமும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வியாழன், 6 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon