மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 ஜன 2020

கிச்சன் கீர்த்தனா: முட்டைப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: முட்டைப் பணியாரம்

காலை நேரப் பரபரப்பில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குச் சத்தான உணவைச் செய்துகொடுக்கும் கட்டாயத்திலும், வீட்டில் இருக்கும் பொருளை வைத்து ஏதாவது செய்துகொடுக்கும் அவசரத்திலும் பல அம்மாக்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த முட்டைப் பணியாரம் எளிதாகவும், சுவையாகவும் அமையும்.

காலை நேரம் டிபனுக்கு சிறந்த உணவு முட்டை. அந்த முட்டையில் வழக்கமாகச் செய்யும் ஆம்லெட், பொரியல் என்று ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமாக, பணியாரம் செய்து கொடுத்தால் குழந்தைகள் காலை உணவைத் தவிர்க்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

என்ன தேவை?

இட்லி மாவு - ஒரு கப்

முட்டை - 2

சின்ன வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

கடுகு - தாளிக்க

உளுத்தம்பருப்பு - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். அடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு , நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி மாவுடன் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கலவைக்கு ஏற்ப தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

திங்கள் 27 ஜன 2020