மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

பூச்சிகளை கவனிங்க...

 பூச்சிகளை கவனிங்க...

விளம்பரம்

பூச்சிகள் பற்றி தெரிந்துகொள்ள ஈஷா விவசாய இயக்கம் இரண்டு நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.

ஈஷாவின் பசுமைக் கரங்களின் திட்டத்தின் மூலமாக வேளாண் காடுகள் வளர்ப்பு, எளிய வழியில் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, மகசூலை பெருக்குவது எப்படி என்பது உள்ளிட்ட பயிற்சிகள் விவசாயிகளுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ‘பூச்சிகளை கவனிங்க’ என்ற தலைப்பில் ஈஷா விவசாய இயக்கம் வழங்கும் இரண்டு நாள் களப் பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையம் அடுத்துள்ள மேவானி கிராமத்தில் இயங்கி வரும் ஈஷா விவசாயப் பண்ணையில் நடைபெறும் இந்த முகாமில் பூச்சியியல் வல்லுனர் பூச்சி. நீ.செல்வம் கலந்துகொண்டு பயிற்சியளிக்கவுள்ளார்.

இரண்டு நாட்களிலும் பூச்சிகளின் மற்றும் அதன் வகைகளை தெரிந்துகொள்ளுதல், நன்மை செய்யும் பூச்சிகள் எவை, தீமை செய்யும் பூச்சிகள் எவை என எப்படி கண்டறிவது, இயற்கை விவசாயத்தில் பூச்சிகளின் பங்கு என்ன, நன்மை செய்யும் பூச்சிகளை எவ்வாறு வரவழைப்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து வகுப்பு எடுக்கப்படவுள்ளது. இரண்டு நாள் நிகழ்வு முடிந்ததும் பூச்சிகள் பற்றிய உங்களுடைய புரிதலே மாறியிருக்கும். விவசாயத்தில் மகசூலை கூட்டுவதற்கு உங்களுக்கு இந்த பயிற்சி முகாம் உதவி புரியும்.

குறிப்பு

நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான செலவுகளை தோராயமாக ரூ.1,000 வீதம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

முன்பதிவுக்கு: 83000 93777, 94425 90077

விளம்பர பகுதி

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon