மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 30 மா 2020

கிச்சன் கீர்த்தனா: பட்டர் புரொக்கோலி

கிச்சன் கீர்த்தனா: பட்டர் புரொக்கோலி

காலிஃப்ளவர் போன்ற தோற்றம் கொண்ட புரொக்கோலி இப்போது எளிதாகக் கடைகளில் கிடைக்கிறது. புரொக்கோலியை உற்றுப் பார்த்தால், அதிலுள்ள பூவின் பகுதிகள் ரத்த நாளங்களைப் போலிருப்பதை உணரலாம். இது இதயத்துக்கு இதமான உணவு என்பதில் சந்தேகமே இல்லை. வைட்டமின் சி, கே, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த புரொக்கோலி, இதய நோய்களிலிருந்து காக்கும். இதிலுள்ள சல்ஃபோராபேன், ரத்த நாளங்களின் உள் பகுதியில் ஏற்பட்ட சிதைவையும் வீக்கத்தையும் சரிசெய்யக்கூடியது. அப்படிப்பட்ட புரொக்கோலியை வைத்து எளிமையாக செய்யக்கூடிய இந்த பட்டர் புரொக்கோலி இதயத்துக்கு இதமளியுங்கள்.

என்ன தேவை?

புரொக்கோலி - 300 கிராம்

வெண்ணெய் - 25 கிராம்

மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - அரை டீஸ்பூன் (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்)

உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வாணலியில் வெண்ணெயைச் சேர்த்து உருக்கி, சுத்தம் செய்து நறுக்கிய புரொக்கோலி சேர்க்கவும். வெண்ணெய் எல்லா இடங்களிலும் நன்கு படும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து குலுக்கியபடி (டாஸ் செய்து) வேக வைக்கவும். மூன்று நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துச் சுடச்சுடப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: பனீர் முட்டைகோஸ் ரோல்

புதன், 12 பிப் 2020

chevronLeft iconமுந்தையது