மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டுச் சட்னி

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டுச் சட்னி

வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும் வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமுள்ளது. காலை சிற்றுண்டிக்கு இந்தச் சட்னி நல்ல காம்பினேஷனாக அமையும். வெயில் காலத்தில் ஏற்படும் நீர் வறட்சியைப் போக்கும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். செரிமானத்தை எளிதாக்கும்.

என்ன தேவை?

வதக்கி அரைக்க:

வாழைத்தண்டு – ஒன்று (சிறு துண்டுகளாக நறுக்கவும்)

தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்

தனியா – அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – சிறிதளவு

பெருங்காயத்தூள் – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 5

எண்ணெய் – தாளிக்க

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், தேங்காய்த்துருவல், வாழைத்தண்டு, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு வதக்கிய வற்றை அரைத்துக்கொள்ளவும். மறுபடியும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, அரைத்த விழுதில் சேர்த்தால் வாழைத்தண்டுச் சட்னி தயார்.

நேற்றைய ரெசிப்பி: வாழைத்தண்டு சுக்கா

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது