மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 25 அக் 2020

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு ரசம்

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு ரசம்

நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டு ஆரோக்கியத்தின் சுரங்கமாகக் கருதப்படுகிறது. எடையைக் குறைக்கவும், சிறுநீரகக் கற்களின் பாதிப்பிலிருந்து உடலைக் காக்கவும் வாழைத்தண்டு மிகவும் கைகொடுக்கும். குறிப்பாக வெயில் காலங்களில் கட்டாயம் உண்ண வேண்டியவற்றில் முக்கியமான வாழைத்தண்டில் ரசம் செய்து சாப்பிடுங்கள்; உடல்சூட்டைத் தணியுங்கள்.

என்ன தேவை?

வாழைத்தண்டு – ஒன்று

தக்காளி – 2

காய்ந்த மிளகாய் – 5

பூண்டு – 3 பற்கள்

ரசப்பொடி – சிறிதளவு

எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

கொத்தமல்லி நறுக்கியது – சிறிதளவு

உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு

நெய், கடுகு, சீரகம் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாழைத்தண்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு காய்ந்த மிளகாய், தக்காளி, பூண்டு இந்த மூன்றையும் தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து வாழைத்தண்டு சாற்றுடன் கலக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், ரசப்பொடி சேர்த்துக் கலந்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, சீரகம் தாளிக்கவும். பின்னர் வாழைத்தண்டு கலவையை இதில் சேர்த்து கொதிக்கவிடவும். கலவை நான்கு கொதித்ததும், எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைத்தண்டுச் சட்னி

புதன், 27 மே 2020

chevronLeft iconமுந்தையது