மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

பேரப் பிள்ளையின் புன்னகையைப் போல...

 பேரப் பிள்ளையின் புன்னகையைப் போல...

விளம்பரம்

காவேரி மருத்துவமனை

"பனைமட்டையில ஒன்னுக்கு அடிச்சத போல தொனதொனனு என்னப்பா சத்தம்?"

"ஒரு வார்த்தை பேச விடறானே பாரேன்..."

-வயதான தாயின் அல்லது தந்தையின் புலம்பல் பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளிவைப்பதற்காக பெற்ற மகன்களின் அல்லது மருமகள்களின் இப்படிப்பட்ட உரையாடல்கள் கிராமத்துக் காற்றில் நிறைய கலந்திருக்கும்.

முதுமைப் பருவம் என்பது இரண்டாம் குழந்தைப் பருவம் என்பது நம்மில் அனைவருக்குமே தெரியும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 10 கோடியே நாற்பது லட்சம் முதியோர்கள் இருக்கிறார்கள். முதியோர்கள் என்றால் 60 வயது அல்லது அதற்கும் மேலான வயதுகொண்டவர்கள்.

இந்த முதியவர்கள் எல்லாருக்குமே வாழ்வின் கடைசி பருவத்தை எளிதாகக் கடக்கும் கொடுப்பினை அமைகின்றதா என்றால் இல்லை. நாம் காலையில் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டு இரவு வீடு திரும்பும் வரை எத்தனை எத்தனை முதியவர்களை சாலைகளில் பார்க்கிறோம். சிலர் உற்றாரோடும் பெற்ற பிள்ளைகளோடும் தெரிகிறார்கள். சிலர் யாருமில்லாத ஆதரவற்றவர்களாய் அலைகிறார்கள். நெஞ்சம் கனக்கிறது.

முதுமைப் பருவத்தின் முக்கிய தேவை என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியம் என இரு வகைகளிலும் அவர்கள் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும். முதியவர்களுக்கு சரியான மருத்துவ சேவையை வழங்குவதும், அதன் மூலம் அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதும் நவீன மருத்துவ அறிவியலின் முன்னேற்றங்களுக்கு மிகவும் எளிதானதாக ஆகிவிட்டாலும், முதுமை மனம் தன்னிடம் அனுசரனை காட்டுபவர்களையே எதிர்பார்க்கும்.

மனமும் உடலும் தனித்தனியானதில்லை. உடலுக்கு வயதாகிவிட்டால் அது மனதிலும் எதிரொலிக்கும். ஒன்றன் மேல் ஒன்று கற்பனை செய்ய முடியாத வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்போது முதியவர்களுக்கு தனிமையை விட தண்டனை ஏதும் கிடையாது.

இந்த தனிமை குணப்படுத்த முடியாத ஒன்று அல்ல. வயதானவர்களுடன் தொடர்ச்சியான கவனிப்பு மற்றும் நேரத்தை செலவிடுவதன் மூலம், அவர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள், உணர்வுகளை உண்டாக்கலாம். அவர்களின் மலரும் நினைவுகளை, அனுபவங்களை கேட்பதன் மூலம் அது நமக்கு வழிகாட்டியாக அமைவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வடிகாலாக அமையும்.

உங்கள் தாய் தந்தையர் முதியவர்களாக இருந்தால் நீங்கள் எவ்வளவு தொலைவில் வாழ்ந்தாலும் தினமும் அவர்களோடு தொலைபேசியில் பேசுங்கள். தொலைபேசியில், ‘என்னம்மா நல்லாருக்கியா... சரி வச்சுடட்டுமா?’ என்று கேட்பதல்ல அவர்களின் எதிர்பார்ப்பு. தொலைபேசி அழைப்பில் நிறுத்தி நிதானமாக பேசுங்கள். பல கதைகளைப் பேசுங்கள். முக்கியமாய் அவர்களை பேசவிட்டு கேளுங்கள். ‘ம்’ கொட்டுங்கள்.

உங்களால் முடிந்த போதெல்லாம் நேரில் வந்து பாருங்கள். உங்களுக்கு அது ஒரு வேலையாக இருக்கக் கூடும். ஆனால் அவர்களுக்கு அது ஒரு திருவிழா என்பதை மறக்காதீர்கள். உங்களுடன் நிகழ்வுகளுக்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள். விருந்துகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு அழைத்துச் செல்வது இந்த எதிர்மறை உணர்ச்சிகளை எதிர்த்துப் போராட அவர்களுக்கு உதவக்கூடும்.

காவேரி மருத்துவமனை

காவேரி மருத்துவமனை எத்தனையோ முதியவர்களுக்கு மருத்துவமனையாக மட்டுமல்ல மகத்துவ மனையாக இருக்கிறது. காவேரியின் மருத்துவர்களும், ஊழியர்களும் முதியோரை மதிக்கும் பண்பானவர்கள். சிகிச்சை என்பது பேரப் பிள்ளையின் புன்னகையைப் போல இயல்பாக அவர்களைத் தொடும். அதுவே காவேரி மருத்துவமனையின் திறம்.

தொடர்பு கொள்ள: +91-431-4022555 / 4077777

விளம்பர பகுதி

புதன், 27 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon