மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: தயிர் மாங்காய்ப் பச்சடி

கிச்சன் கீர்த்தனா: தயிர் மாங்காய்ப் பச்சடி

கோடையில் உண்டாகும் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்து குறைவது இயற்கை. இப்படிப்பட்ட நேரத்தில் மாங்காயில் உள்ள குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தைச் சீராகப் பராமரித்து, இப்பிரச்சினையைத் தடுக்கும். தயிர், கோடைக்கேற்ற எளிதில் ஜீரணமாகக் கூடிய பொருள். இந்த தயிர் மாங்காய்ப் பச்சடி, சாம்பார், புளிக்குழம்பு ஆகியவற்றுக்குச் சிறந்த தொடுகறியாக இருப்பதுடன் கோடை வெப்பத்தைக் குளிர்ச்சியாக்கும்.

என்ன தேவை?

மாங்காய் – ஒன்று

தயிர் – அரை கப்

பச்சை மிளகாய் – 2

சீரகம் – அரை டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

கல் உப்பு – அரை டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

மாங்காயைச் சுத்தம்செய்து கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் மாங்காய், பச்சை மிளகாய், சீரகம், கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். தயிரில் மஞ்சள்தூள் மற்றும் அரைத்த மாங்காய் விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதை மாங்காய்ப் பச்சடியில் சேர்க்கவும்.

நேற்றைய ரெசிப்பி: தயிர் அவல் தோசை

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது