மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: மகாராஷ்டிர ஸ்பெஷல் - சக்கர் பாரே!

கிச்சன் கீர்த்தனா: மகாராஷ்டிர ஸ்பெஷல் - சக்கர் பாரே!

வட இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிராவில் சக்கர் பாரே என்று அழைக்கப்படும் இது, ஈவினிங் ஸ்நாக்ஸாகச் சாப்பிட பெஸ்ட் சாய்ஸ். இந்த டிஷ்ஷின் ஸ்பெஷாலிட்டி, ஒரு வாரம் வரை ஏர் டைட் பாக்ஸில் வைத்துப் பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

என்ன தேவை?

மைதா மாவு - ஒன்றரை கப்

ரவை - ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - கால் கப்

வெண்ணெய்/நெய் - கால் கப்

பால் - கால் கப்

உப்பு - ஒரு சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய்/நெய் சேர்த்து உருகியதும் பால் மற்றும் சர்க்கரையைச் சேர்க்கவும். பால் பொங்கியதும் அடுப்பை நிறுத்திவிடவும். இத்துடன் மைதா மாவு, ரவை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக பிசைந்து உருட்டிக் கொள்ளவும். மாவை விருப்பத்துக்கேற்ப டயமண்ட் வடிவில் கட் செய்து கொள்ளவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: மகாராஷ்டிர ஸ்பெஷல் - அம்தி!

செவ்வாய், 15 செப் 2020

chevronLeft iconமுந்தையது